த்ரிஷாவுடன் தனியாக 5 நாட்கள்... புட்டுபுட்டு வைத்த தெலுங்கு ஹீரோ!

Published : Dec 24, 2018, 03:57 PM ISTUpdated : Dec 24, 2018, 04:02 PM IST
த்ரிஷாவுடன் தனியாக 5 நாட்கள்... புட்டுபுட்டு வைத்த தெலுங்கு ஹீரோ!

சுருக்கம்

திரையுலகிற்கு வந்து 16 ஆண்டுகள் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் த்ரிஷாவின் நிஜ வாழ்க்கையில் ஆயிரத்தெட்டு திருப்பங்கள். இந்த நிலையில் வெகு நாட்கள் கிசுகிசுக்கப்பட்டு வந்த ஒரு விவகாரத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் தெலுங்கு ஹீரோவான ராணா.   

த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளரான வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதோடு திருமணம் நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் த்ரிஷாவும் பாகுபலி புகழ் ராணா டகுபதிக்கும் இடையே காதல் இருப்பதாகவும், ஏற்கெனவே டேட்டிங்கில் இருந்து வந்ததாகவும் வதந்திகள் பரவி வந்தன. ஆனால், இந்த விஷயத்தில் த்ரிஷாவும் ரானாவும் மவுனம் காத்து வந்தனர். நாங்கள் நல்ல நண்பர்கள் என மெல்ல வாய் திறந்தனர். இப்போது வெளிப்படையாகவே தங்களது உறவு குறித்து வெளிப்படுத்தி இருக்கிறார் ராணா.

தனியார் தொலைக்காட்சியில் நடந்து வரும் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணா, நான் த்ரிஷாவுடன் ஐந்து நாட்கள் டேட்டிங்கில் இருந்தேன். ஆனால் அவருடன் நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லை. அவர் நல்ல தோழி. நான் இப்போது சிங்கிளாகத்தான் இருக்கிறேன்’ எனக்கூறிய அவரிடம், பிரபாஸுடன் அனுஷ்கா டேட்டிங் சென்றாரா எனவும் கேட்கப்பட்டது. அனுஷ்காவுடன் பிரபாஸ் டேட்டிங் செல்லவில்லை’ என உறுதியாக கூறினார். 

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!