அமெரிக்காவுக்குப் போகும் முன் நடந்த மீட்டிங்... ரஜினி குடும்பத்தினரின் சூப்பரான ஐடியா...

By sathish kFirst Published Dec 24, 2018, 3:40 PM IST
Highlights

ரஜினிகாந்த் ஓய்வுக்காக நேற்று முன்தினம் டிசம்பர் 22 இரவு குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இன்றைய நிலையில் அரசியல் கட்சி என்று இருந்தால் அக்கட்சிக்கு என ஒரு தொலைக்காட்சி சேனல் இருந்தால் மட்டுமே அக்கட்சியின் கொள்கைகள், செய்திகள் மக்களை சென்றடைவதாக நம்பப்படுகிறது. 
 
தற்போது இருக்கும் பல சேனல்களில் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக இருப்பதால் சேனல் இல்லாத கட்சிகளின் நிகழ்வுகள் கூட மக்களை சென்றடைவதில்லை. அந்த வகையில் அரசியலில் களமிரங்கவுள்ள ரஜினி டிவி சேனல் ஒன்றை துவங்க உள்ளதாகவும் அதற்காக சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வந்தது.

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த வருடம் அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் உள்ளார். அதனால், தனது அரசியல் பயணத்துக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று சேனல் தொடங்க திட்டமிட்டுள்ளார். தன்னுடைய பிரச்சாரங்கள், கொள்கைகளை பரப்ப முடிவெடுத்து இந்த சேனலை தொடங்க உள்ளார் என்கிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் செய்டியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "பிறக்கப்போகும் 2019 புத்தாண்டில் மக்கள் அனைவரும் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். எதிர்பார்ப்பை படம் பூர்த்திசெய்யும் படமாக ‘பேட்ட’ இருக்கும் என நம்புகிறேன். 

தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய பெயரில் வேறு யாரோ தொலைக்காட்சி சேனல் தொடங்க முயற்சிப்பதாக எனக்குத் தகவல் வந்தது. அதற்கு முன்பாக எனது பெயரில் தொலைக்காட்சி சேனலுக்கு நான் பதிவு செய்துள்ளேன் என்று ரஜினிகாந்த் கூறினார்.

இந்நிலையில், அமெரிக்காவிற்கு செல்லும் முன் குடும்பத்தினருடன் மீட்டிங்கில், சூப்பர்ஸ்டார் டிவி, தலைவர் டிவி, ரஜினி டிவி ஆகிய பெயர்களில் ரஜினி தேர்ந்தெடுத்திருப்பது ரஜினி டிவி. அதற்குக் காரணம், ரஜினி என்கிற பெயரை வைத்துவிட்டால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்பு செய்யலாம் என்று  திட்டமிட்டுள்ளார்களாம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் நடிகர்களில் சூப்பர்ஸ்டார் இருப்பார்கள், தலைவர் என்றாலும் வேறு யாரையாவது குறிக்கலாம். எனவே, ரஜினி என்கிற பெயர் எல்லா மாநிலத்திலும் மட்டுமல்ல உலகம் முழுவதும் வியாபாரத்துக்கு உதவும் என்று நினைத்து இந்தப் பெயரை உறுதி செய்திருக்கிறார்களாம் ரஜினி குடும்பத்தினர்.

அவர் பெயரில் தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்தத் தகவலை மீடியாக்கள் முன்னதாகவே வெளியிட்டுவிட்டன. ரஜினி தரப்பில் அதனை உறுதிப்படுத்த முடியாமல் இருந்த நிலையில் அச்செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார் ரஜினி. 
 

click me!