ஒரே ஒரு கேள்வியால் எதிரிகளை தெறிக்கவிட்ட தமிழிசை..! அதிர்ந்து போன டெல்லி மீட்டிங்..!

By thenmozhi gFirst Published Dec 10, 2018, 7:40 PM IST
Highlights

டெல்லி போய் மீட்டிங் போட்டாலும் சரி, அமெரிக்கா போய் மீட்டிங் போட்டாலும் சரி, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு முடிவோடு தான் இருக்கிறார்.

டெல்லி போய் மீட்டிங் போட்டாலும் சரி, அமெரிக்கா போய் மீட்டிங் போட்டாலும் சரி, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு முடிவோடு தான் இருக்கிறார். வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடக்க உள்ள பார்லிமென்ட் தேர்தலில் எப்படியாவது மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என எப்படி எப்படியோ... என்ன என்னமோ ப்ளான் போடுது எதிர்கட்சி....இல்ல இல்ல.. எதிர்கட்சிகள்....

அதாவது காங்கிரஸ் மட்டும் என்றால் பாஜாகவை அசைக்க முடியாது என உணர்ந்த காங்கிரசார் மற்றும் ஐடியா கொடுக்கும் சந்திர பாபு நாயுடு.... "வலிமை வாய்ந்த கட்சிகள், ஆதரவு கொடுக்கும் சில கட்சிகள் என மொத்தம் 14 கட்சிகளை ஒன்று சேர்த்து இன்று டெல்லியில் பெரும் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் பல முக்கிய முடிவுகளும், பாஜக வை வீழ்த்த வியூகங்களும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், திமுக  தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தி, கனிமொழி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட மேலும் பல கட்சி தலைவர்கள் கலந்துக்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் பாஜக மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என விமர்சனம் எழுந்த நிலையில், தமிழிசையின் ஒரே ஒரு கேள்வி எதிர்கட்சிகளை தெறிக்கவிட்டு உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் தமிழிசை, "டெல்லியில் மிகப்பெரிய கூட்டணியை ஏற்படுத்தியதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளார் ஸ்டாலின். எதிர்கட்சிகளின் கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் யார் என கேள்வி கேட்டால் கூட்டணி துண்டு துண்டாகி விடும் என, டெல்லி மீட்டிங்கை புஸ்ஸுன்னு பஞ்சர் செய்துவிட்டார். தமிழிசையின் இந்த பதில் டெல்லி மீட்டிங் வரை சென்று உள்ளது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.


 
அதே வேளையில், தமிழிசை சொல்ற மாதிரி பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழும் போது கூட்டணி எதிர்கட்சிகளிடையே கூச்சல் குழப்பும் உருவாகும் என்கிறது இப்போ இருக்குற அரசியல் ஸ்டேட்டஸ்
 

click me!