பலருக்கு செய்த தருமம்கூட காப்பாற்றவில்லையே... தாங்க முடியா சோகத்தை கவிதை வடிவில் வெளியிட்ட தமிழிசை!

Published : Aug 28, 2020, 10:09 PM ISTUpdated : Aug 28, 2020, 10:19 PM IST
பலருக்கு செய்த தருமம்கூட காப்பாற்றவில்லையே... தாங்க முடியா சோகத்தை கவிதை வடிவில் வெளியிட்ட தமிழிசை!

சுருக்கம்

வசந்தகுமார் மறைவுக்கு தெலங்கானா ஆளுநரும் அவருடைய அண்ணன் மகளுமான தமிழிசை செளந்தராஜன் கண்ணீர் அஞ்சலியை கவிதை வடிவில் வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலினின்றி இன்று மாலை உயிரிழந்தார். தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு வசந்தகுமார் சித்தப்பா ஆவார். வசந்தகுமாரின் மரணத்தையடுத்து தமிழிசை உடனடியாக ஐதராபாத்திலிருந்து புறப்பட்டார். இந்நிலையில் வசந்தகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார்.
அதில், சித்தப்பா:
நீங்கல் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது...
என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்...
அப்பா குமரி அனந்தனின் அரசியல் தககம் இரண்டு பேரிடமும் இருந்தது.
ஆனால். வேறுவேறு பாதையில் பயணித்தோம்...


இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர, இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு.
தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும் துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்..
சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது, சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது...
வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது..
கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும்...


கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது...
ஆளுநகராக இருந்தாலும்
அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்...
- தமிழிசை செளந்தரராஜன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு