சந்தோஷத்தின் உச்சத்தில் தமிழிசை குடும்பம் !! அப்பா குமரி அனந்தன், தாய் மற்றும் மகனுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட தெலங்கானா ஆளுநர் !!

By Selvanayagam PFirst Published Sep 2, 2019, 9:36 AM IST
Highlights

தமிழிசை  தன் உழைப்பாலும், ஆற்றலாலும் உயர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது தனக்க பெருடையளிப்பதாக இருப்பதாகவும்  அவரது தந்தை குமரி அனந்தன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 

டந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்துள்ளார் தமிழிசை. அவர் தலைவர் பதவியில் இருந்தபோது பாஜக பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், மக்கள் சந்திப்பு, செய்தியாளர் சந்திப்பு, உறுப்பினர் சேர்க்கை என கட்சியை சுறுசுறுப்புடன் நடத்தி வந்தார். அவரைப்பார்த்து பலரும் எவ்வளவே கிண்டல் செய்துள்ளனர்.

ஆனால் அந்த கிண்டல்கள், கேலிகள் என எல்லாவற்றையும் பாஸிடிவ்வாக எடுத்துக் கொண்டு மிக சிறப்பாக செயல் பட்டார். தமிக மக்கள் பாஜகவை விரும்பாவிட்டாலும் தமிழிசைக்கு மிகுந்த மரியாதை அளித்தனர்.

இதற்குப் பரிசாக தமிழிசையை தெலங்கானா மாநில வசர்னராக நியமித்தது மத்திய பாஜக அரசு. இதையடுத்து அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும், பாஜக நிர்வாகிகளும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழிசையைப் பொறுத்தவரை தமிழக பாஜக தலைவராக இருந்தாலும் அவர் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், இலக்கியச் செல்வர் என்று அழைக்கப்படுபவருமான குமரி அனந்தனின் மகள்.

இந்நிலையில் தமிழிசை  தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு குமரி அனந்தன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குமரி அனந்தன், தமிழிசை உழைப்பாலும், ஆற்றலாலும் உயர்வு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என கூறினார்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய் 

என்ற வள்ளுவன் மொழிக்கேற்ப தமிழிசையை தனது மகள் என்று  சொல்லிக் கொள்வதில் பெருமையாக இருப்பதாகவும் குமரி அனந்தன் தெரிவித்தார்.
இதனிடையே தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதையடுத்து தகது தாயை சந்தித்து அவரிடம் வாழ்த்துப் பெற்றார். இதே போல் தமிழிசையின் மகனும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

click me!