கட்சி தொடங்கிய பிறகு எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிச்சார்... அரசியலுக்கு வருவதற்கு முன்பு ரஜினி நடிக்கக் கூடாதா..? கேட்கிறார் தமிழருவி மணியன்!

By Asianet TamilFirst Published Oct 20, 2019, 10:25 PM IST
Highlights

தற்போது ரஜினி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அந்தப் படங்கள் தீபாவளிக்கு ஒன்றும் பொங்கலுக்கும் ஒன்றும் வெளியாக உள்ளது. நடிகர் ரஜினி படங்களை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த தீபாவளிக்கு பிறகு, தீவிர அரசியலில் ஈடுபடுவார். தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலிருந்து இறங்கினால் நாளையே கட்சி தொடங்கி  ரஜினி அரசியலுக்கு வருவார் என காந்தி மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
 நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்; ரஜினியால் மட்டுமே  தமிழகத்தைக் காப்பாற்ற முடியும் என்று தொடர்ச்சியாகப் பேசிவருபவர் தமிழருவி மணியன். ரஜினியும் அவரை அழைத்து பலமுறை ஆலோசனை நடத்தினார். அதன் பிறகே 2017 இறுதியில் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இதனையடுத்து ரஜினி அரசியல் வருகை பற்றி அவ்வப்போது கருத்து தெரிவித்துவருகிறார் ரஜினி. ஆனாலும், ரஜினி அரசியல் கட்சி தொடங்காமல், தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருப்பதால், அவருடைய ரசிகர்கள் பதற்றத்திலிருக்கிறார்கள்.


இந்நிலையில் ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்பது குறித்தும், அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது குறித்தும் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார். “எம்ஜிஆர் அரசியல் கட்சி தொடங்கிய பிறகும் சினிமாவில் நடித்தார். அரசியலில் இருக்கும் போதும் சினிமாவில் நடித்தார். நடித்துக்கொண்டிருந்த படங்களை எல்லாம் முடித்து  பிறகுதான் முதல்வரானார். இந்த விஷயத்தில் எம்ஜிஆருக்கு ஒரு நீதி, ரஜினிக்கு ஒரு நீதியா இருக்க முடியும்?
தற்போது ரஜினி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அந்தப் படங்கள் தீபாவளிக்கு ஒன்றும் பொங்கலுக்கும் ஒன்றும் வெளியாக உள்ளது. நடிகர் ரஜினி படங்களை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த தீபாவளிக்கு பிறகு, தீவிர அரசியலில் ஈடுபடுவார். தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலிருந்து இறங்கினால் நாளையே கட்சி தொடங்கி  ரஜினி அரசியலுக்கு வருவார். ரஜினியைப் பொறுத்தவரை சினிமாவில் நடிக்கிறார். மக்களை ஏமாற்றுவதற்காக அவர் நடிக்கவில்லை“ என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 

click me!