சீமான் AK-74 எடுத்துகிட்டு எங்கிருந்தாலும் ஈழத்துக்கு வாங்க: தமிழன் பிரசன்னாவின் டுவிட்

Published : Oct 27, 2018, 06:17 PM ISTUpdated : Oct 27, 2018, 06:18 PM IST
சீமான் AK-74 எடுத்துகிட்டு எங்கிருந்தாலும் ஈழத்துக்கு வாங்க: தமிழன் பிரசன்னாவின் டுவிட்

சுருக்கம்

அண்ணன் சீமான் எங்கு இருந்தாலும் உடனே AK-74 யை எடுத்துக்கொண்டு மேடைக்கு (ஈழத்திற்கு) வரவும்…

இலங்கையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் மகிந்த ராஜபக்சே திடீர் பிரதமரானார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிறிசேனா மற்றும் விக்ரமசிங்கே ஆட்சியை பிடித்தனர். சிறிசேனா அதிபரான நிலையில் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வென்று விக்ரமசிங்கே பிரதமர் ஆனார். 

இந்த நிலையில் திடீரென நேற்று விக்ரம சிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார். அத்துடன் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராகவும் சிறிசேனா உத்தரவிட்டார். இந்த அரசியல் மாற்றத்தால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா ராஜபக்சே பதவியேற்பு தொடர்பாக நக்கல் நையாண்டியாக ஒரு டுவிட் போட்டுள்ளனர். அவரது டுவிட்டர் பதிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சீண்டியுள்ளார்.

அவரது டுவிட்டரில், அண்ணன் சீமான் எங்கு இருந்தாலும் உடனே AK-74 யை எடுத்துக்கொண்டு மேடைக்கு (ஈழத்திற்கு) வரவும்… என்று பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!
கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!