ஸ்டாலினுக்கு சிக்கல் உண்டாக்கும் தமிழன் பிரசன்னா ! இவங்களுக்வெல்லாம் என்ன பிரச்சனைன்னு தெரியலயே ?

Published : Apr 10, 2019, 09:20 AM IST
ஸ்டாலினுக்கு சிக்கல் உண்டாக்கும் தமிழன் பிரசன்னா !  இவங்களுக்வெல்லாம் என்ன பிரச்சனைன்னு தெரியலயே ?

சுருக்கம்

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கடும் கண்டனத்துக்கு  ஆளான வைரமுத்து விவகாரம் குறித்து, திமுகவின் பேச்சாளர் தமிழன் பிரசன்னா ஆபாசமாக பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பழைய வீடியோ என்றாலும் தமிழன் பிரச்னனாவின் பேச்சு ஸ்டாலினுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து அவதூறாக பேசினார். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. நாடு முழுவதும் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து வைரமுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அத்துடன் அந்த பிரச்சனை அடங்கிப் போனது.

ஆனால் வைரமுத்து பேசிய அந்தப் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து வெளியிட்டனர். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இது குறித்து வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் பெரியாழ்வாருக்கு பிறந்தவர்தான் ஆண்டாள் என எச்.ராஜா கூறியுள்ளாரே, ஆண்டாளுக்கு பெர்த் சர்டிபிகேட் கொடுக்க அவர் என்ன டாக்டரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து ஆண்டாள் குறித்தும், பெரியாழ்வார் குறித்தும் மிக ஆபாசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  
இந்தியாவில் கோடிக்கணக்கான் மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றி வரும் நிலையில், அவர்களது மனதைப் புண்படுத்தும் வகையில் யார் பேசினாலும் அது தவறுதான். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழன் பிரசன்னா பேசியிருப்பது ஸ்டாலினுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!