கிறிஸ்தவ நாடு இந்தியா ! திமுக ஆதரவு எஸ்றா சற்குணம் கண்டுபிடிப்பு !!

Published : Apr 10, 2019, 08:30 AM IST
கிறிஸ்தவ நாடு இந்தியா ! திமுக ஆதரவு  எஸ்றா சற்குணம் கண்டுபிடிப்பு !!

சுருக்கம்

இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு என்றும் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதம் என்ற ஒரு மதமே இல்லை என்றும் இசிஐ என்ற கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வருபவரும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான எஸ்றா சற்குணம் தெரிவித்துள்ளார்.  

தமிழகம் முழுவதும் இசிஐ என்ற ஒரு கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வருபவர் பேராயர் எஸ்றா சற்குணம். இவருக்கு தமிழகத்தில் பல தேவாலயங்கள் சொந்தமாக உள்ளன. இதன் மூலம் எஸ்றா சற்குணம் தமிழகத்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்பி வருகிறார்.இது மட்டுமல்லாமல் எஸ்றா மறைநத முதலமைச்சர்  கருணாநிதியின் நெருங்கிய நண்பர். 

இந்நிலையில்  தனியார் தொலைக்காட்சி ஒன்றில்  நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற எஸ்றா சற்குணம். இந்து முன்னணி என்ற அமைப்பு தீவிரவாதத்தை ஊக்குவிக்கக் கூடியது என  தெரிவித்தார். அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அந்த விவாதத்தின் போதே இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் எஸ்றா சற்குணத்துக்கு பதிலடி கொடுத்தார். நீங்கள் கிறிஸ்தவ முன்னணி நடத்தும்போது நாங்கள் இந்து முன்னணி நடத்தக் கூடாதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த எஸ்றா சற்குணம், இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு என்று தெனாவெட்டாக பதில் அளித்தார். மேலும் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்து என்ற ஒரு மதமே இல்லை என்றும் கூறினார்.

எஸ்றா சற்குணத்தின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதம் என்பது உலகின் பழமையான  மதம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் எஸ்றாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்