தேச துரோக வழக்கு... அடுத்த பட்டியல் ரெடி...?? அதிரடி காட்டும் பாஜக...??

By Ezhilarasan BabuFirst Published Oct 10, 2019, 4:02 PM IST
Highlights

அதில் திரு.ப.சிதம்பரம் அவர்கள்.  சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல மிக உயர்ந்த  இலக்கியவாதியும் கூட,  இந்திய நாட்டின் குறிப்பிடத்தக்க பொருளியல் அறிஞர். ஆசியாவின் சிறந்த நிதியமைச்சராக இருமுறை விருது பெற்றவர்.  இலக்கியவாதிகளின் குருகுலமாகத் திகழ்ந்த இலக்கிய சிந்தனை அமைப்பின் நிறுவனர். ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் திறம்பட பேசும், எழுதும், ஆற்றல் மிக்கவர்.
 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்திற்கு ஆதரவாக தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் களமிறங்கியுள்ளனர் சிதம்பரத்தின் மீது  தொடுக்கப்பட்டிருப்பது பொய் வழக்கு என கூறி மத்திய அரசை கண்டித்து  அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்ததற்கு பின்னர்,  கலை இலக்கியம் சார்ந்த விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். விளிம்பு நிலையில் உள்ள எழுத்தாளர்களின் புத்தகங்களை பதிப்பிக்க உதவி செய்து வந்தார். இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  அவருக்கு ஆதரவாக தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  அதில் திரு.ப.சிதம்பரம் அவர்கள்.  சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல மிக உயர்ந்த  இலக்கியவாதியும் கூட,  இந்திய நாட்டின் குறிப்பிடத்தக்க பொருளியல் அறிஞர். ஆசியாவின் சிறந்த நிதியமைச்சராக இருமுறை விருது பெற்றவர்.  இலக்கியவாதிகளின் குருகுலமாகத் திகழ்ந்த இலக்கிய சிந்தனை அமைப்பின் நிறுவனர். ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் திறம்பட பேசும்,எழுதும், ஆற்றல் மிக்கவர். 

தேசத்தின் நிகழ்வுகளை ஆங்கிலத்திலும். தமிழிலும் நூலாகப் படைத்தவர் எழுத்து என்கிற இலக்கிய அமைப்பினை நிறுவி நிகழ்கால தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்து வருபவர் உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர், அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் இப்போது எந்த ஆதாரமும் இல்லை என்று அவரே  மறுத்து வருகிறார் இந்நிலையில் ஆளுகின்ற அரசு அவர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து அவரது ஜாமின் மனுக்களை மறுத்துவரும் ஜனநாயகப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம்.  என அந்த   அமைப்பின் உறுப்பினர்களான தஞ்சை தமிழ்  பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் அவ்வை நடராசன்,  டாக்டர் ம.ராசேந்திரன்,  திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன்,  கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்  ஏகாதேசி,  கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கம், விஜயா பதிப்பகம் வேலாயுதம்,  பத்திரிக்கையாளர்கள் இலக்கியா நடராஜன்.  கழுகு ராமலிங்கம். போன்றோர்  இந்த கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே மதத்தின் பெயரால் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது கும்பல் தாக்குதல்கள் நடந்துவருவரை, தடுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்களின் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில். தற்போது ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!