தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப்ஜானின் பொய்யான கணிப்புகள்... புட்டுப்புட்டு வைக்கும் புதிய வானிலை ஆராய்ச்சியாளர்..!

By Thiraviaraj RMFirst Published May 1, 2020, 2:37 PM IST
Highlights

தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப்ஜான் சமீபகாலமாக கணித்து வரும் வானிலை நிலவரம் பொயாகி வருவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் சமீபகாலமாக வானிலையை துல்லியமாக கணித்து வரும் பார்த்தன். 


தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப்ஜான் சமீபகாலமாக கணித்து வரும் வானிலை நிலவரம் பொயாகி வருவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் சமீபகாலமாக வானிலையை துல்லியமாக கணித்து வரும் பார்த்தன். 

சில ஆண்டுகளாக தமிழ்நாடு வெதர்மேன் வானிலை அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களிடையே பிரபலமானார். அவரை பின் தொடர்பவர்களும் அதிகமாகி வந்தனர். அடுத்து அவர் தனது பிரபலத்தைவைத்து வானிலை விவகாரங்களில் மட்டுமின்றி அதையும் தாண்டி சில விஷயங்களில் கவனம் செலுத்தி காண்டவர்சிக்கு ஆளானார். அடுத்து அவர் கணிக்கும் வானிலை நிலவரம் பெரும்பாலும் பொய்த்து வருகின்றன. இந்நிலையில் பார்த்தனின் வானிலை என்கிற புதிய ஆராய்ச்சியாளர் ஒருவர் துல்லியமாக வானிலை தகவல்களை வழங்கி வருகிறார்.

 

சமீபத்தில் அவர் வெளியிட்டு வரும் அனைத்து நிலவரங்களும் அப்படியே பெரும்பாலும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், ப்ரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில், ’’கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வரும் ஏப்ரல் 26 முதல் 30 ஆம் தேதி வரை மழை பெய்ய சாத்தியக் கூறுகள் இருப்பதாக பதிவிட்டிருந்தேன். ஆனால் தற்போது வானியல் நிகழ்வுகள் மிகவும் தெளிவாக உள்ளன. ஏப்ரல் 30-ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் மற்ற நாட்களில் மழை வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும் வரும் ஏப்ரல் 28 நள்ளிரவு முதல் அடுத்த நாள் 29ஆம் தேதி காலை வரை நல்ல மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை வெப்பச்சலனத்தால் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். இந்த பகுதிகளில் ஏப்ரல் 29 ஆம் தேதி காலை இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது. எனவே அன்றைய தினம் மழையின் மீது ஒரு கண் வைத்திருப்போம். இது கடலில் இருந்து ஏற்படும் காற்றால் மேகக் கூட்டங்கள் இழுக்கப்பட்டு வடகிழக்கு பருவமழை போல் பெய்ய போகிறது’’ என அவர் அறிவித்து இருந்தார்.

இதனை எதிர்த்து ப்ரதீப்ஜானிடம் கேள்வி எழுப்பியுள்ள பார்த்தன், ’’ஏப். 26-30. முதல் 4 நாட்கள் சென்னை மழை பெய்யும் என்று ப்ரதீப் ஜான் அறிவித்து இருந்தார். நமக்கு ஏதாவது கிடைத்ததா? நாம் எப்படி இவரை நம்பி கண்மூடித்தனமாக பின்பற்றுவோம். 1 நாள் மட்டுமல்ல, 4 நாட்கள். என் கேள்வி - இந்த முன்னறிவிப்புக்கு என்ன அடிப்படை?’’என கேள்வி எழுப்பி இருந்தார். 

அடுத்து மற்றொரு பதிவில் பிரதீப் ஜானிற்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் பார்த்தன். ‘’திரு பிரதீப் ஜான், எனது பக்கத்திற்கு வந்து மதிப்புமிக்க விஷயங்களை கருத்திட்டதற்கு நன்றி. வழக்கம்போல உங்கள் தோல்விகளைப் பற்றி எதுவும் சொல்லாமல் திரும்பிச் சென்றுள்ளீர்கள்.  ஆனால் என் விமர்சனம் தொடரும். மீண்டும் தவறு செய்தால் நிச்சயம் செய்வேன். அடுத்தடுத்து உங்கள் பக்கத்தில் நான் தொடர்ந்து கேள்வி கேட்பேன்.  நீங்கள் என்னை தடுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

குறிப்பு - நானும் தோல்வி அடைவேன்.  ஆமாம், எதிர்காலத்தில் தோல்வி அடையலாம், அடுத்த நாளே அதற்கான காரணம் கொடுக்கிறேன். என்ன தவறு நடந்தது என்று தெரியவில்லை என்கிறேன். அதுவே நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதை, அதுவே நம்மை நம்புபவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை.  நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  தோல்விகள் எல்லோருக்கும் பொதுவானது, நாம் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்’’எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பார்த்தன்.

click me!