மஹாராஷ்டிரா, டெல்லியில் நடப்பதை போல் தமிழகத்தில் நடக்கவிடக் கூடாது.. பதறும் சுகாதாரத்துறை செயலர்..

Published : Apr 24, 2021, 12:51 PM ISTUpdated : Apr 24, 2021, 02:06 PM IST
மஹாராஷ்டிரா, டெல்லியில் நடப்பதை போல் தமிழகத்தில் நடக்கவிடக் கூடாது.. பதறும் சுகாதாரத்துறை செயலர்..

சுருக்கம்

ஏற்கனவே தேவையான ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் இருந்தாலும் 2400 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை  சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்த  உள்ளதகாவும், சிகிச்சைக்காக படுக்கைகள் கிடைக்காது என்ற கவலை வேண்டாம், போதுமான அளவில் படுக்கை வசதிகள் தமிழகத்தில் உள்ளதாக தெரிவித்தார்.  

கொரோனா தொற்று பரவலில் தமிழகம் சவலான காலகட்டத்தில் பொதுமக்கள் யாரும் அச்சமோ பதற்றமோ அடைய வேண்டாம் என சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தொற்று அதிகரித்து வரும் இந்த சூழலில் தேவையற்ற பதற்றத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், நோயை கட்டுபடுத்தவே இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே தேவையான ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் இருந்தாலும் 2400 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை  சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்த  உள்ளதகாவும், சிகிச்சைக்காக படுக்கைகள் கிடைக்காது என்ற கவலை வேண்டாம், போதுமான அளவில் படுக்கை வசதிகள் தமிழகத்தில் உள்ளதாக தெரிவித்தார். 

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எடுக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் கலந்தாலோசித்து அதில் சிலவற்றை நாம் பின்பற்றி வருவதாக கூறிய அவர் மஹாராஷ்டிரா, டெல்லியில் நடைபெறுவது போல் தமிழகத்தில் நடக்கவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். ஆக்சிஜன் பற்றாக்குறை அல்லது ஆக்சிஜன் லீக்கேஜ் என்பது ஆகக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக மேலும் கூறினார். 

கொரோனா தொற்றை இறங்குமுகமாக கொண்டு வர கடந்த முறை பின்பற்றிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறிய அவர், தொற்று படிப்படியாக உயருவதை தடுக்கவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில்  கொரோனோவிற்க்கு சித்த மருத்துவம் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் விரைவில் சென்னையிலும் சித்த மருத்துவம் கொண்டுவரப்படும் என கூறினார். கொரோனோ தொற்று உள்ளவர்கள் சென்னையில் உள்ள ஸ்கிரினிங் சென்டர் வந்தடைந்து தொற்றின் தன்மையை கண்டறிந்து கொள்ள வேண்டும் என கூறிய அவர், காலதாமதம் ஏற்படாத வகையில் தொடர்ந்து செயல்படும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

PREV
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!