தமிழக தாமரை கட்சியின் தலைவர் குப்புராமா? இல்லை குப்புசாமியா!: பாவம் அவங்களே கன்பீஸ் ஆகிட்டாங்க..!

By Vishnu PriyaFirst Published Jan 8, 2020, 6:40 PM IST
Highlights

சிந்துபாத் சீக்ரெட்டை விடவும் மிக புதிராக போய்க் கொண்டிருக்கிறது தமிழக பா.ஜ.க.வின் தலைவர் யார்? எனும் கேள்விக்கான விடை. அவரா, இவரா இல்லை அவரா? என்று  லோக்கல் செய்திகள் முதல் தேசிய செய்திகள் வரை எல்லோரையும் வெச்சு எழுதிட்டாங்க. ஆனாலும், தங்கவேட்டை போல் இன்னும் தொடருது தலைவர் வேட்டை. 

சிந்துபாத் சீக்ரெட்டை விடவும் மிக புதிராக போய்க் கொண்டிருக்கிறது தமிழக பா.ஜ.க.வின் தலைவர் யார்? எனும் கேள்விக்கான விடை. அவரா, இவரா இல்லை அவரா? என்று  லோக்கல் செய்திகள் முதல் தேசிய செய்திகள் வரை எல்லோரையும் வெச்சு எழுதிட்டாங்க. ஆனாலும், தங்கவேட்டை போல் இன்னும் தொடருது தலைவர் வேட்டை. 

பொன்னார், சி.பி.ஆ., வானதி, இல.கணேசன், முருகானந்தம் என எல்லாரையும் சொல்லிவிட்டு கட்ட கடைசியில....அக்கட்சியில் நேத்திக்கு சேர்ந்த நமீதாவையும் கூட இந்த தலைவர் லிஸ்டில் வெச்சு பேசுவதுதான் பா.ஜ.க.வுக்கு நேர்ந்திருக்கும் மிகப்பெரிய அவமானம். 
’தமிழ்நாட்டில் தாமரை நிச்சயம் மலர்ந்தே தீரும்’ என்று சொல்லச்சொன்னால் ‘தமுல்நாட்லோ லோட்டஸ் மல்லாந்தே தீரும்!’ என்று கர்ணகொடூரமாக நமீ அதை உச்சரிக்க, பா.ஜ.க.வின் தீவிர விசுவாசிகளுக்கோ பிராணனே போய்விடுகிறது. 

இப்படியாகப் போய்க் கொண்டிருக்கிறது பா.ஜ.க.வின் புதிய தலைவர் விஷயத்தை வைத்து நடக்கும் விளையாட்டு. இந்த நிலையில், இந்த முயற்சியில் ஒரு வளர்ச்சியாக கடந்த ஞாயிறு அன்று, மேலிட நிர்வாகிகள் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்து முடிந்தது. இதன் முடிவில் நிச்சயம் தலைவர் பற்றிய அறிவிப்பு வருமென்று எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எந்த அறிகுறியுமில்லை. இந்த நிலையில்தான் குப்புராம்! என்பவர் தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக ஒரு தகவல் வைரலானது. 

யார்ரா இந்த குப்புராம்? என்று பா.ஜ.க.வினருக்கே தெரியலை. இதற்குள் ஒரு வயதான நபரின் போட்டோவை போட்டு, ‘ராமநாதபுரத்தை சேர்ந்த இவர்தான் பா.ஜ.க.வின் புதிய தலைவர்’ என்றார்கள். இது மேல்நிலை நிர்வாகிகளின் கவனத்துக்கும் போக, அவர்களிடம் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. சூழல் இப்படி போய்க் கொண்டிருக்கையில் பா.ஜ.க.வின் தமிழக தலைவர்களோ குப்புராம் பற்றிய தீவிர ஆலோசனை, விசாரணையில் இறங்கினர். சிலரோ அது குப்புராம்! என்று சொல்ல, சிலரோ அவரை ‘குப்புசாமி’ என்று குறிப்பிட துவங்கினர். 

தலைவர்களே இப்படி தாறுமாறாக தடுமாறுவதைப் பார்த்து தொண்டர்களுக்கு குழப்பம் பாதி, சிரிப்பு மீதி. ‘பாவம் அவங்களே கன்பீஸ் ஆயிட்டாங்க’ என்று தொண்டர்கள் தலைவர்களை கிண்டலடித்ததுதான் உச்சம். இந்த தேசத்தை ஆளும் அதிகாரத்தை தொடர்ந்து இரண்டாம் முறையாக பெற்றுள்ள கட்சி! சர்வதேசமும் பிரமிப்போடும் பார்க்கும் பிரதமரை கொண்டுள்ள கட்சி! எனும் பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்கார பா.ஜ.க......தமிழகத்தில் இப்படியா அவதிப்பட வேண்டும்? அவலம்!

click me!