
தமிழகத்திற்கு பலமான முதல் அமைச்சர் வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தாறுமாறான தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பேட்டி அளித்தாலே ஏகத்துக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். அதிமுகவை இயக்கும் கட்சி என்ற விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் பா.ஜ.க. தலைவர்கள் பேட்டி அளித்தால் சும்மா அதிரும்ல.
அப்படி சிங்கமா சீறி செம சீரியஸ் பேட்டியை ஜஸ்ட் லைக் தட்டாக தட்டி விட்டிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதா கிருஷ்ணன், தமிழகத்திற்கு பலமான முதல் அமைச்சர் வேண்டும் என்று திரிகொளுத்திப் போட்டுள்ளார்.
பொன்னார் என்ன சொன்னார்!
பொன்னார் கம் பேக் டூ தி மைக், "தமிழகத்தில் நேர்மையான முறையில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது. கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாகும்.அதிமுக அரசு 5 ஆண்டு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம். அதிமுகவின் இரு அணிகள் பிரிவதற்கும், மீண்டும் சேர்வதற்கும் பா.ஜ.க. காரணம் அல்ல." இவ்வாறாக தனது பேட்டியை முடித்திருக்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
"கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாகும். அதே வேளையில் அதிமுக அரசு 5 ஆண்டுகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம்" என்ற இரண்டு வாக்கியங்களில் ஏதோ பொறி தட்டுகிறது......