உ.பிக்கு அடுத்து தமிழ்நாடுதான் டார்கெட்.. மோடி coming.. திமுகவை அலறவிடும் மூத்த பத்திரிக்கையாளர்.

Published : Feb 21, 2022, 11:14 AM IST
உ.பிக்கு  அடுத்து தமிழ்நாடுதான் டார்கெட்.. மோடி coming.. திமுகவை அலறவிடும் மூத்த பத்திரிக்கையாளர்.

சுருக்கம்

இதே நேரத்தில் உத்திர பிரதேச தேர்தல் முடிவடைந்த பிறகு வரும் மே மாதத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா போன்ற தலைவர்களின் கவனம் தமிழகத்தின் மீது திரும்பும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 6 அல்லது 6 எம்பிக்களையாவது தமிழகத்தில் கைப்பற்ற வேண்டும்,  2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்படும். 

உத்திரபிரதேச மாநில தேர்தல் முடிந்த பிறகு பாஜக தலைவர்களின் டார்கெட் தமிழ்நாடுதான் என டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிடம் என்ற சூழல் மங்கி வருகிறது, 2026இல் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில்தான் பாஜக தலைவர்கள் களமிறங்குவார்கள் எனக் கூறியுள்ளார். 

வட இந்தியாவில் அசைக்க முடியாத சக்தியாக பாஜக இருந்து வந்தாலும் தென்னிந்தியாவிலும் கால் பரப்ப அக்கட்சி முயற்சித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் பாஜகவின் முயற்சிகள் பலனளித்துள்ள நிலையில், கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அக்காட்சியால் வளரமுடியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நுழையவே முடியவில்லை, இது அக்கட்சிக்கு பெரும் குறையாகவே இருந்து வருகிறது. நாட்டையே ஆளும் தங்களால் தமிழகத்தில் கால் பதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் அக்கட்சிக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும் தமிழகத்தில் தங்கள் கட்சிக்கு என தனித்துவத்தை உருவாக்கும் முயற்சிகள் அக்காட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் . கடந்த  நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகத்தில் முகாமிட்டு தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தனர். ஆனால் அது பெரிய அளவிற்கு கைகொடுக்கவில்லை. கழகங்கள் இல்லாத ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்குவோம் என்று பாஜக கடந்த சில ஆண்டுகளாக முழங்கி வருகிறது. ஆனால் தமிழக மக்கள் அக்காட்சியை அங்கீகரிக்க தொடர்ந்து மறுத்து வருகின்றனர். ஆனாலும் அக்கட்சி எத்தனையோ பகிரத முயற்சிகளை மேற்கொண்டும் வருவதுடன், தமிழகத்தில் கால் ஊன்றாமல் விடமாட்டோம் என கங்கணங்கட்டி காட்டி  வருகிறது.

தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன், அண்ணாமலை என அடுத்தடுத்து மாநில தலைவர்கள் மாற்றப்பட்டும் பெரிய அளவிற்கு பலனில்லை. இதே நேரத்தில் மறுபுறம் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் திமுக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ளது, திமுக வெற்றி பெற்றால் அது பாஜகவின் திட்டங்களுக்கு பின்னடைவாக இருக்கும் என்பதால் திமுகவை  வீழ்த்த  வேண்டும்  என பல்வேறு முயற்சிகளில் பாஜக ஈடுபட்டது, அதிலும் பலனில்லை. இந்நிலையில்தான் எதிர்க்கட்சியான அதிமுகவை காட்டிலும் பாஜக திமுக அரசையும், முக ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்றும், இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றும், கிறிஸ்தவ இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகிற கட்சி என்றும்  பாஜக தீவிர பிர்ச்சாரம் மேற்கொண்டு வருகிறது. 

இது ஒரு புறமிருக்க அடுத்துவரும் 2026 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக  உத்திர பிரதேச சட்டமன்றத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் தற்போது பாஜக ஈடுபட்டுவருகிறது. இதனால் அக்காட்சியில் மும்மூர்த்திகளான மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா போன்றோர் உத்தரபிரதேச மாநிலத்தில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.  ஊ.பியில் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் பாஜக தேசிய தலைவர்கள் தமிழகத்தில் கவனம் செலுத்துவார்கள் என கூறப்பட்டு வருகிறது. டெல்லி மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் இத்தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு :- திராவிடம் என்ற சூழல் தமிழகத்தில் நாளுக்கு நாள் மங்கி வருகிறது.

இதே நேரத்தில் உத்திர பிரதேச தேர்தல் முடிவடைந்த பிறகு வரும் மே மாதத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா போன்ற தலைவர்களின் கவனம் தமிழகத்தின் மீது திரும்பும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 6 அல்லது 6 எம்பிக்களையாவது தமிழகத்தில் கைப்பற்ற வேண்டும்,  2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்படும். நிச்சயம் தமிழகத்தில் 2020இல் ஆட்சியைப் பிடிப்பதற்கான வேலைகளில் மோடி இறங்குவார். தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் மற்றும் இதர கட்சிகள் நரேந்திர மோடியை விமர்சித்து, தாக்கிப் பேசினால்தான் சிறுபான்மையினரின் ஓட்டு தங்களுக்கு கிடைக்கும் என எண்ணுகிறார்கள்.

ஆனால் வட இந்தியாவில்நிலைமை வேறு, அங்கு முழுக்கமுழுக்க மோடிக்கு ஆதரவான சூழல் இருக்கிறது. அந்த நிலைமை விரைவில் தென்னிந்தியாவிலும் ஏற்படும், குறிப்பாக தமிழகத்திலும் கூடியவிரைவில் அதுபோன்ற சூழல் உருவாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!