கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் சென்னை.. அமைச்சர் விஜயபாஸ்கரின் அதிரடி முடிவு

By karthikeyan VFirst Published May 1, 2020, 2:55 PM IST
Highlights

தமிழ்நாட்டில் சென்னை மட்டும் தான் கொரோனா பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
 

தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மார்ச் மாத இறுதியிலிருந்து ஏப்ரல் 12ம் தேதி வரை கொரோனா பரிசோதனை குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை தினமும் சராசரியாக 90க்கு மேல் இருந்தது. 

ஆனால் ஏப்ரல் 13ம் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்கு முன்புவரை கொரோனா பாதிப்பு முழு கட்டுக்குள் இருந்தது. தினமும் சராசரியாக 7000 டெஸ்ட் செய்யப்பட்டபோதிலும் சராசரியாக 70 என்ற அளவில் தான் பாதிப்பு இருந்தது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை சுமார் 10 ஆயிரம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் உறுதியான பாதிப்பில் 80-90% பாதிப்பு சென்னையில் தான். சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பே இல்லை. 

தமிழ்நாடு முழுவதும் 1258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை வெறும் 27 தான். அந்தளவிற்கு கொரோனா தடுப்பு பணிகளும் சிகிச்சைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

ஆனால் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. சென்னையில் கொரோனா சமூக தொற்றாக பரவிவிட்டது. இதுவரை 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னையில், யார் மூலமாக அல்லது எப்படி கொரோனா தொற்றியது என்பதே தெரியாதளவிற்கு பலருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பெரும் சவாலாக இருப்பது சென்னை மட்டும்தான். 

இந்நிலையில், கடந்த சில தினங்களாக செய்தியாளர்களை சந்திக்காமல் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அல்லது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகிய இருவரில் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினமும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்து வந்தனர். 

ஆனால் செய்தியாளர்களுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கும் நோக்கிலும் பணிச்சுமையாலும் கடந்த சில நாட்களாக செய்திக்குறிப்பின் மூலம் பாதிப்பு அப்டேட் செய்யப்பட்டது. சென்னையில் கொரோனா கோர தாண்டவம் ஆடிவரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். அப்போது சென்னையில் சமூக தொற்று குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!