தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடி கடன் உள்ளது.. முறையா வரிசெலுத்துங்க.. பகிரங்கமாக எச்சரித்த அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Jun 26, 2021, 11:13 AM IST
Highlights

வணிகம் செய்ய கூடியவர்களிடம் சரியான முறையில் வரி செலுத்த வேண்டும், அதே நேரத்தில் தவறான முறையில் வியாபாரம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் நேர்மையாக வணிகம் செய்பவர்களுக்கு நண்பர்களாக இருப்போம் என்று தெரிவித்துள்ளோம். 

சென்னை தி.நகரில் உள்ள சர்.பி.டி தியாகராயர் அரங்கில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறோம், அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை மண்டலத்திற்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. 

இந்த  கூட்டத்தில் துறையில் உள்ள குறைகளை கேட்டறிந்தேன் மேலும் பல்வேறு ஆலோசனையும் வழங்கி உள்ளோம்.வணிகம் செய்ய கூடியவர்களிடம் சரியான முறையில் வரி செலுத்த வேண்டும், அதே நேரத்தில் தவறான முறையில் வியாபாரம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் நேர்மையாக வணிகம் செய்பவர்களுக்கு நண்பர்களாக இருப்போம் என்று தெரிவித்துள்ளோம். பத்திரப்பதிவுத்துறை பொருத்தவரை மக்கள் எளிதாக அணுக வேண்டும். கடந்த காலத்தைப் போல் போலியான பத்திரங்களை பதியக் கூடாது அந்த இடத்திற்கு உள்ள தரத்தை ஏற்று பத்திரம் பதிய வேண்டும் என்றும், பத்திரம் பதிவு செய்யக்கூடிய அன்றே ஆவணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற  ஆலோசனையை பதிவுத் துறைக்கு வழங்கியுள்ளோம். பத்திரப்பதிவு செய்வதற்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு ஏதாவது காலதாமதம் ஏற்பட்டாலும் அவருக்கு குறையிருந்தால் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 

அதற்கான மூன்று தொலைபேசி எண்களை தமிழ்நாடு முழுவதும் கொடுத்துள்ளோம். அதன் மூலமாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 புகார்கள் வருகிறது. அதில் உடனடியாக 50 புகார்களுக்கு தீர்வு காணப்படுகிறது. எனவே பதிவு செய்யக் கூடியவர்களே உரிய நேரத்திற்கு வருவதற்கு முன் கூட்டியே செய்தியை தெரிவித்துள்ளோம் பத்திர பதிவு செய்ய வருபவர்களுக்கு டோக்கன் கொடுத்துள்ளோம். அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் நிச்சயமாக சரி செய்யப்படும் என்றார். இன்று தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடி கடன் உள்ளது அனைவரும் வரி செலுத்தும் வகையில் பத்திரப்பதிவை எளிமைப்படுத்த உள்ளோம், மேலும் உள்ள விஷயங்களை முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். 
 

click me!