பாஜக அலுவலகத்தில் பாலியல் தொல்லைகள்..? அதிர்ச்சியளிப்பதாக காங். துணை தலைவர் கோபண்ணா வேதனை.

By Ezhilarasan BabuFirst Published Jun 26, 2021, 10:46 AM IST
Highlights

பாஜக அலுவலகத்தில் விசாரணை கமிட்டி அமைக்கப்படும் என தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி ரவி தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, கோபண்ணா, கமலாலயம் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்படுகின்ற அலுவலகமாக மாறிவருகிறது என விமர்சித்தார்.

சிறிது காலமாக பாஜக அலுவலகத்தில் அதிகரித்து வருகின்ற பாலியல் தொல்லைகள் போன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இது அக்காட்சியை எந்த திசையில் பயணிக்கிறது என்பதை காட்டுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கோபண்ணா வேதனைத் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கோபண்ணா, இரண்டு ஆக்சிசன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்சிமீட்டர் ,தெர்மாமீட்டர், சேனிடைசேர், வேபரிசேஷன், மாஸ்க் ,சோப் போன்ற பொருட்கள் கொண்ட 15 தொகுப்புகளை தமிழ்நாடு மருத்துவ இயக்குநிரடம் வழங்கினர். 

பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ரஞ்சன் குமார் ஏற்பாட்டில் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனையின் படி தமிழ்நாடு மருத்துவ இயக்குனரிடம் இன்று வழங்கினோம். மேலும், இந்த பணியை மக்கள் நலன் சார்ந்து கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் கடந்த 50 நாட்களாக முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சரவை கொரோனா தொற்றை ஒழிபதில் மிகப்பெரும் சாதனை படைத்திருக்கிறது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மிகவும் சிறப்பாக பணி செய்து வருகிறார் என கூறினார்.பாஜக அலுவலகத்தில் விசாரணை கமிட்டி அமைக்கப்படும் என தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி ரவி தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, கோபண்ணா, கமலாலயம் பாலியல் தொல்லைக்கு ஆளாகபடுகின்ற அலுவலகமாக மாறிவருகிறது என விமர்சித்தார். 

சிறிது காலமாக பாஜக அலுவலகத்தில் அதிகரித்து வருகின்ற பாலியல் தொல்லைகள் போன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது, இது அக்கட்சி எந்த திசையில் பயணிக்கிறது என்பதை காட்டுகிறது. இதற்கான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். 
 

click me!