தமிழக ஆளுநருடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திடீர் சந்திப்பு... திமுக, அதிமுக மீது புகார்?

By vinoth kumarFirst Published Sep 23, 2020, 1:34 PM IST
Highlights

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திடீரென சந்தித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திடீரென சந்தித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வாரம் முழுவதும் சேவை வாரமாக அறிவித்து அதனை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் பயணம் செய்து வருகிறார். 

இந்நிலையில், தமிழத்தில் கடந்த ஒரு வாரமாக தமிழக பாஜகவினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், அதுபோல, சென்னை மதுரவாயில் பைபாஸ் சாலையில் பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கட்சியின் கொடி கம்பத்தை நட்டு ஏற்றி வைத்தார். இந்த பிரச்சனையின் போது உடனடியாக கொடி கம்பங்கள் அக்கற்றப்பட்டது. இதனையடுத்து, எல்.முருகன் மீது தியாகராயநகர் மற்றும் பாண்டிபாஜர் காவல் நிலையங்களில் தடையை மீறி ஊர்வலம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு புகார் வந்ததையடுத்து தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

மேலும், நேற்று முன்தினம் சென்னையில் நங்கநல்லூர் பகுதியில் சுவர் விளம்பரம் வரைவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து பாஜகவினர் மீது திமுகவினர் அடக்குமுறையை ஏவி வருவதாகவும் இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் அவர்கள் புகார் மனுவாக கொடுக்க சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக  தமிழகத்தில் மட்டும் தான் பாஜகவினர் மீது வழக்குகள் போடப்படுவதாகவும், இதன் மீது உள்நோக்கம் உள்ளதாகவும் எல்.முருகன் கூறியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

click me!