வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளின் உணர்வுகளை புரிஞ்சு நடந்துக்கோங்க.. ஸ்டாலினுக்கு TTV முக்கிய கோரிக்கை.!

Published : Jun 11, 2021, 04:47 PM IST
வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளின் உணர்வுகளை புரிஞ்சு நடந்துக்கோங்க.. ஸ்டாலினுக்கு TTV முக்கிய கோரிக்கை.!

சுருக்கம்

பல்வேறு மோசமான சூழல்களிலும் பாடுபட்டு விளைவிக்கும் விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு மழையில் நனைந்த நெல்லுக்கு எந்தவித பிடித்தமும் இல்லாமல் முழு விலையையும் வழங்கிட வேண்டும் என டிடிவி.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில்;- "காவிரி டெல்டா பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல இடங்களில் நெல் கொள்முதல் செய்வதில் நிகழும் குளறுபடிகளை தமிழக அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு மழையில் நனைந்த நெல்லுக்கு எந்தவித பிடித்தமும் இல்லாமல் முழு விலையையும் வழங்கிட வேண்டும்.மேலும் சில இடங்களில் வியாபாரிகளுடன் கைகோர்த்துக்கொண்டு, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அவர்களை அலைக்கழிப்பதாக எழுந்திருக்கும் புகார்கள் குறித்தும் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

பல்வேறு மோசமான சூழல்களிலும் பாடுபட்டு விளைவிக்கும் விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்

PREV
click me!

Recommended Stories

அஜித் பவாருக்குப் பிறகு NCP தலைவர் யார்..? மகாயுதி கூட்டணி தொடருமா..? மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..!
அஜித் பவாருக்கும், சுப்ரியா சுலேவுக்கும் என்ன உறவு..? அரசியல் குடும்பத்தின் பின்னணி..!