தீபாவளிக்கு எக்ஸ்ட்ரா ஒரு நாள் லீவு கேட்கும் ஆசிரியர்கள்...!! மன உளைச்சல் இன்றி கொண்டாட கோரிக்கை...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 9, 2019, 12:14 PM IST
Highlights

அன்றே வெளியூரிலிருந்து பணிக்குத் திரும்புவது மிகவும் சிரமம் ஏற்படுத்துவதோடு மன உளைச்சலையும்  அது ஏற்படுத்தும். தீபாவளி நன்னாளை குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் தீபாவளி மறுநாளான திங்கள் கிழமையினை விடுமுறை நாளாக அறிவிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறது. 

இந்தாண்டு ஞாயிற்றுக் கிழமை வரும் தீபாவளி பண்டிகையை மன உளைச்சல் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் , தீபாவளிக்கு மறுநாளான திங்கட் கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்த விவரம். 

இந்த வருடம் தீபாவளி எதிர்வரும் 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பெரும்பாலும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் வேலை செய்வதில்லை.பல்வேறு மாவட்டங்களில் பல கிலோ மீட்டர் தொலைவில் பணிபுரிந்துவருகிறார்கள். அனைவரும்  தீபாவளி நாளினை கொண்டாடிவிட்டு அன்றே வெளியூரிலிருந்து பணிக்குத் திரும்புவது மிகவும் சிரமம் ஏற்படுத்துவதோடு மன உளைச்சலையும்  அது ஏற்படுத்தும். தீபாவளி நன்னாளை குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் தீபாவளி மறுநாளான திங்கள் கிழமையினை விடுமுறை நாளாக அறிவிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறது.

 

மேலும் 28.10.2019 திங்கள் கிழமையினை ஈடு செய்திடும் பொருட்டு  அரசு அறிவிக்கும் ஏதாவது ஒரு விடுமுறை  நாளான சனிக்கிழமையன்று பணி செய்து ஈடுசெய்கின்றோம். எனவே ,மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பரிசீலித்து தீபாவளி மறுநாள் 28.10.2019 அன்று விடுப்பு வழங்கிடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோர் என்று கூறியுள்ளனர்.

click me!