இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் தமிழகம்... 5வது ஆண்டாக NO.1 மாநிலமாக நீடிப்பு..!

By vinoth kumar  |  First Published Dec 16, 2022, 12:09 PM IST

இந்தியா டுடே நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 5வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. 


இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் பிடித்துள்ளது. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பாஜக ஆளும் குஜராத் 4வது இடத்திலும், கர்நாடகா 8வது இடத்திலும், மத்திய பிரதேசம் 13-வது இடத்திலும் உள்ளது.

இந்தியா டுடே நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 5வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. பொருளாதாரம், உட்கட்டமைப்பு வசதி, மருத்துவம், விவசாயம், ஆளுகை, சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் இந்தியா டுடே நிறுவனம் பெரிய மற்றும் சிறிய மாநிலங்களைப் பட்டியலிட்டது. 

Tap to resize

Latest Videos

இந்த பட்டியலில் 1.321.5 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 1.312.5 புள்ளிகளுடன் இமாச்சல பிரதேசம் 2வது இடத்திலும், 1.263 புள்ளிகளுடன் கேரளா 3வதுது இடத்திலும், பாஜக ஆளும் மாநிலமாக குஜராத் 1.217.7 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளது.  இந்த பட்டியலில் பாஜக ஆளும் குஜராத் நான்காவது இடத்திலும், கர்நாடகா எட்டாவது இடத்திலும், மத்திய பிரதேசம் 13-வது இடத்திலும், உத்தரப்பிரதேசம் 18வது இடத்திலும் உள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தை பிடித்துள்ள குஜராத்துக்கு அடுத்தபடியாக 2வது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாடு இந்த பிரிவில் 4வது இடத்தில் இருந்தது. முதலிடத்தை பிடித்த தெலுங்கானா 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  மருத்துவத்தில் முதலிடத்தில் கேரளா உள்ளது. கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சிறப்பான கல்வியில் கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு 4வது இடத்தை பிடித்துள்ளது.

click me!