கச்சத்தீவை போல் முல்லைப் பெரியாறையும் தாரை வார்த்து விடுமோ திமுக..? அச்சம் தெரிவிக்கும் ஆர்.பி. உதயகுமார்

By Ajmal KhanFirst Published Dec 16, 2022, 11:59 AM IST
Highlights

கச்சத்தீவை தாரை வார்த்தது போல், முல்லைப் பெரியாறு அணையின் தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு தாரை வார்த்து விடுமோ ஒரு அச்சம் விவசாயிடத்திலே எழும்பி உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை தமிழக அரசு 142 அடியாக உயர்த்தி நிலை நிறுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்தின் ஜீவாதார வாழ்வாதாரமாக இருக்கிற முல்லைப் பெரியாறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள ஒரு கோடி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஜீவாதாரமாக விளங்குவது.  999 ஆண்டு கால குத்தகை ஒப்பந்த அடிப்படையில், அணையின் பராமரிப்பு உள்ளிட்டஅனைத்து கட்டுப்பாடுகளும் தமிழக அரசின் வசமே இருந்தன. அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணையை பயன்படுத்துவதற்காக ஆண்டுதோறும் குத்தகத் தொகையை தமிழக அரசால் கேரள அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

விஜய் தான் நம்பர் 1..! வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர் வேண்டும்..! உதயநிதியை சந்திக்க திட்டம்- தில்ராஜூ

வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த பொதுப்பணித்துறை

அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்த பின்பு தமிழக பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் தான் கேரள மாநிலத்திற்கு நீர் திறக்கப்பட்டது நம் வழக்கமாக கொண்டுள்ள நடைமுறை ஆகும். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஆண்டு கேரளா அமைச்சர்களே நீர் திறந்து வைத்த சம்பவம் ஒரு பேர்அதிர்ச்சியை உருவாக்கியது. நீதிமன்ற உத்தரவு காரணமாக தற்காலிகமாக 142 அடியாக நீர் திறக்கப்படுகிறது. அணையை பலப்படுத்திய பின்பு 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவுக்கு துணை போவது போல் அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்த போது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் தமிழக பொதுப்பணி துறையினர். 

தன்னிச்சையாக அணை திறப்பு

முல்லைப் பெரியாறு அணை கட்டி 120 ஆண்டுகள் ஆன நிலையில் தமிழகம் சார்பில் யாராவது ஒரு அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ அல்லது தேனி மாவட்ட ஆட்சித் தலைவரோ அல்லது அனைவரும் இணைந்து தான் இதுவரை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்து வைத்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை வரலாற்றிலே முதல்முறையாக தமிழகத்தின் சார்பில் எந்த ஒரு மக்கள் பிரதிநிதிகளோ அல்லது தமிழக அதிகாரிகளோ இல்லாமல் கேரள அரசு தன்னிச்சையாக நீரை திறந்து இருப்பது நமக்கு பேர் அதிர்ச்சி இந்த விவசாயிகள் இடத்தில் ஏற்படுத்தி இருப்பது அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 999 ஆண்டு கால குத்தகை அடிப்படையிலே அணையின் தமிழ்நாட்டுக்கு அனைத்து உரிமைகளும் உள்ள நிலையில், அன்று கேரளா உடைய நீர் பாசன துறை அமைச்சர்  29.10.2021ஆம் தேதி காலை நீர் திறக்கப்படும் என்று இரு தினங்களுக்கு அறிவித்தார் அப்போது தமிழக முதலமைச்சர் மௌனம் சாதித்தார்.

ஆவின் நெய் ஒரு லிட்டருக்கு ரூ 50 உயர்வு..! 9 மாதத்தில் 3வது முறையாக விலை அதிகரிப்பு- அதிர்ச்சியில் பொதுமக்கள்

142 அடியாக நிலை நிறுத்த வேண்டும்

கச்சத்தீவை தாரை வார்த்தது போல் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு இருந்த உரிமைகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு தாரை பார்த்து விடுமோ ஒரு அச்சம் விவசாயிடத்திலே எழும்பி உள்ளது. அப்படி தாரைவார்த்து விட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் முல்லைப் பெரியாறு நம்பி இந்த ஐந்து மாவட்ட விவசாயிகள் இந்த பொன்மொழிகிற பூமி பாலைவனமாக காட்சியளித்து விடுமோ என்று கண்ணீரோடு கவலையோடு அரசின் கவனத்திலே எடுத்துச் சொல்கிறோம். ஆகவே அணையின் நீர்மட்டம் கூடிய விரைவிலே 142 அடியை எட்ட உள்ள நிலையில்  நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி, அதை நீண்ட நாட்களுக்கு நிலை நிறுத்தி தமிழகத்தின் உரிமையை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

சாதிக்க வேண்டியவர்களை சாகடித்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் ரம்மி.. ஆளுநருக்கு எதிராக கொதிக்கும் அன்புமணி..!

click me!