பூச்சி, புழு, விலங்குகளை விட மோசமானது தமிழக காங்கிரஸ்: திட்டித் தள்ளிய கே.எஸ்.அழகிரி

By Vishnu PriyaFirst Published Feb 4, 2020, 6:13 PM IST
Highlights

அரசியல் என்பது கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டும், சுயமரியாதை சார்ந்ததாக இருக்க வேண்டும். எப்படியாவது கட்சியை கரை சேர்க்க வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுப்பதாக அரசியல் இருக்க கூடாது. ஜீவராசிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். எறும்புகள் ஊர்ந்து கொண்டே இருக்கும். விலங்குகள் நடந்து கொண்டே இருக்கும். தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி நகராது, சிந்தனையிலும் மாற்றம் வராது! என்றால் யார்தான் திரும்பிப் பார்ப்பார்கள்! -கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

* பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டனர். இப்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் மக்களை மதத்தின் பெயரால் பிரித்தாளுகிறது. அன்று சுதந்திர போராட்டமானது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்தது. ஆனால் இன்றைய சுதந்திர போராட்டமோ அன்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு எதிரக நடக்கிறது. -    பினராய் விஜயன் (கேரள முதல்வர்)

* மத்திய பட்ஜெட்டை ‘வெற்று பட்ஜெட்’ என ராகுல் விமர்சித்துள்ளார். பட்ஜெட் தாக்கலின் போது ராகுல் அருகில் நான் அமர்ந்திருந்தேன். பெரும்பாலான நேரம் அவர் கண்களை மூடித்தான் அமர்ந்திருந்தார். எனவே அவர் பட்ஜெட்டை பற்றி தெரிந்துதான் பேசுகிறாரா என தெரிய வேண்டும். அமைச்சர் நிர்மலா சீதாராமன் சோர்வடைந்தபோதெல்லாம் அவரை பார்த்து ராகுல் சிரித்தார். பெண்களின் கஷ்டம் உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா?-    ஸ்மிருதி இரானி (மத்திய அமைச்சர்)

* அன்புள்ள பிரதமரே...உங்கள் மேஜிக் உடற்பயிற்சியை வழக்கம் போல் மேலும் சில முறை முயற்சித்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அந்த பயிற்சி இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி மாற்றத் துவங்கலாம். - ராகுல்காந்தி (காங்கிரஸ் எம்.பி.)

* முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான, எஸ்.டி.பி.ஐ. எனப்படும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, போராட்டங்கள் என்ற பெயரில் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தவும், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கவும் திட்டமிட்டுள்ளது. அதனால்குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களின் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். - பினராய் விஜயன் (கேரள முதல்வர்)

* அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் அமைப்புச் சட்டப்படி பதவி பிரமாணம் எடுத்தவர். ஆனால் அதை மீறி, கண்ணுக்கு முன் மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார். மக்களை மத ரீதியாக தூண்டாட துணிகிறார். அவரை பதவியிலிருந்து கவர்னர் நீக்க வேண்டும். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -    மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

* பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. என் சொந்த மாவட்டமான தூத்துக்குடி குலசேகரன்பட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க உள்ளது. இது போன்ற நல்ல பல திட்டங்களால் கவரப்பட்டதால் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். -சசிகலா புஷ்பா (அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.)

* அரசியல்வாதிகளின் தலையீட்டால்தான் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சிரமமாக உள்ளது. நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளது. எனவே நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு இடைஞ்சல் தரும் நபர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவர்.
-திண்டுக்கல் சீனிவாசன் (தமிழக வனத்துறை அமைச்சர்)

* நாம் வளர வளர உள்ளத்தில் அழுக்கு தேங்குகிறது. பாத்திரங்களையும், வீட்டையும், துணியையும் தினமும் சுத்தம் செய்வது போல் மனதையும் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சுத்தமே செய்ய முடியாத அளவிலான பெரிய குப்பை கிடங்கு போல் மனம் ஒரு கட்டத்தில் மாறிவிடும். -    ராமசுப்ரமணியன் (உச்ச நீதிமன்ற நீதிபதி)

* மத்தியரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டமானது சல்லடை போன்றது. சலிக்கும்போது யார் தங்குகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் குடியுரிமை வழங்கப்படும். மற்றவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும். எனவே அனைவரும் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும். 
-    கனிமொழி (தி.மு.க. எம்.பி.)

* நல்ல எண்ணங்களை மனதில் வளர்ப்பதன் மூலம், வாழ்க்கையில் அமைதியை அனுபவிக்க முடியும். நம் நலனைப் பற்றி எண்ணும் முன்பாக, அடுத்த மனிதர்களின் தேவைகளைப் பற்றி நினைத்தால், இந்த உலகத்தையே சொர்க்கமாக மாற்றிவிடலாம். எனவே சுயநலமற்ற நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.  -மாதா அமிர்தானந்தமயி (அமிர்த பீடம் நிறுவனர்)

* அரசியல் என்பது கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டும், சுயமரியாதை சார்ந்ததாக இருக்க வேண்டும். எப்படியாவது கட்சியை கரை சேர்க்க வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுப்பதாக அரசியல் இருக்க கூடாது. ஜீவராசிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். எறும்புகள் ஊர்ந்து கொண்டே இருக்கும். விலங்குகள் நடந்து கொண்டே இருக்கும். தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி நகராது, சிந்தனையிலும் மாற்றம் வராது! என்றால் யார்தான் திரும்பிப் பார்ப்பார்கள்! -கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

click me!