வெளிறிப்போன டி.டி.வி.தினகரனின் முகம்... அதிர்ச்சி கொடுத்த அமமுக நிர்வாகிகள்..!

Published : Feb 04, 2020, 06:11 PM IST
வெளிறிப்போன டி.டி.வி.தினகரனின் முகம்... அதிர்ச்சி கொடுத்த அமமுக நிர்வாகிகள்..!

சுருக்கம்

அ.ம.மு.க., கட்சியை நடத்தி வருகிற டி.டி.வி.தினகரன், 'அ.தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன்' என வீர வசனம் பேசிக்கொண்டு வருகிறார். மக்களவை தேர்தல் படுதோல்விக்கு பின், அவர் இருக்கிற இடமே தெரியவில்லை. 

அ.ம.மு.க., கட்சியை நடத்தி வருகிற டி.டி.வி.தினகரன், 'அ.தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன்' என வீர வசனம் பேசிக்கொண்டு வருகிறார். மக்களவை தேர்தல் படுதோல்விக்கு பின், அவர் இருக்கிற இடமே தெரியவில்லை. அவரை நம்பி, பணத்தை செலவழித்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சி மாறிக் கொண்டிருக்கிறார்கள்.  மீதமிருப்போரும் கண்விழி பிதுங்கி போய் கிடக்கிறார்கள்.

 

இந்த நிலையிலும் அதிமுகவை மிரட்டிக் கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். ’’கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் ஆக வேண்டும். அதிகாரத்தில் இருப்பதால் முறைகேடுளை மறைக்க முடியும். அமைச்சர்களின் ஊழல் வரும் 2021 ஏப்ரலுக்குப் பின் வெளிவரும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனத்தில் அமைச்சர்களின் தலையீடு உள்ளது. துறைகளில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி நேர்மையான அதிகாரிகளை நியமிக்கச் சொன்னதால்தான் எங்களுடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் அப்போது சண்டை போட்டனர்’’எனக் குண்டைத் தூக்கிப்போட்டார்.

ஆனால் அவரது கட்சியின் நிலவரம் வேறு மாதிரி இருக்கிறார்.  'ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என டெல்டா மாவட்ட நிர்வாகிகளிடம், டி.டி.வி.தினகரன் சொல்லி இருக்கிறார். அதற்கு அந்தப்பகுதி நிர்வாகிகளோ,  'நீங்க செலவுக்கு பணம் கொடுத்தால் ஏற்பாடு செய்கிறோம்' எனச் சொல்லி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். டி.டி.வி.தினகரனுக்கு முகம் வெளிறி போய் இருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

கணினி நிபுணர் பழனிசாமி.. நீங்க இல்ல; டெல்லி ஓனர் நினைத்தாலும் தடுக்க முடியாது.. உதயநிதி சவால்!
திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!