அதிமுக அரசை விமர்சித்து தினம் ஒரு அறிக்கை விடும் ஸ்டாலின்..! களத்தில் இறங்கி கலக்கும் முதல்வர் எடப்பாடியார்

By karthikeyan VFirst Published Jun 25, 2020, 11:07 PM IST
Highlights

முதல்வர் பழனிசாமி கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொரோனா தடுப்பு பணிகளில் களத்தில் இறங்கி கலக்கிவருகிறார். 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. தமிழ்நாட்டில் இன்று(ஜூன் 25) இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3509 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 70977ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முனைப்பில் தமிழகத்தில் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. கடந்த சில நாட்களாக, தினமும் சராசரியாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகிறது. 

கொரோனா தடுப்பு பணிகள், கொரோனா சிகிச்சை பணிகள், அதிகமான பரிசோதனைகள் என கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை பணிகள் என அனைத்தையும் தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. 

தமிழ்நாட்டில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தேசியளவில் அதிகமான கொரோனா பரிசோதனை செய்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பரிசோதனைகளை அதிகரிக்க ஏதுவாக பரிசோதனை மையங்களையும் தமிழக அரசு அதிகரித்துவருகிறது. 

இவ்வாறு தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டாலும், தமிழக அரசின் செயல்பாட்டை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். அவருக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் அவ்வப்போது பதிலடி கொடுத்தும் வருகின்றனர். 

முதல்வர் பழனிசாமியும் மற்ற அமைச்சர்களும் களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர். முதல்வர் பழனிசாமி கோவைக்கு சென்று கோவையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா சிகிச்சை பணிகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டறிந்தார். 

அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த கடுமையான சூழலிலும், ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்காமல், தவறான தகவல்களை நாள்தோறும் தெரிவித்து அரசியல் செய்து வருகிறார். இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் இப்படி செய்வதில்லை என்று ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருந்தார். 

அத்திக்கடவு - அவினாசி திட்ட பணிகளையும் பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி. ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகேயுள்ள திருவாச்சியில் நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, அப்பகுதி விவசாயிகளிடம் பேசி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அந்த சுற்றுவட்டார பகுதி மக்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, சிறுவர்களிடம் என்ன படிக்கிறார்கள் என்று அன்புடன் கேட்டறிந்தார். முதல்வர் பழனிசாமி களத்தில் இறங்கி மக்களுடன் மக்களாக இருந்து, அவர்களிடம் சகஜமாக பழகும் முதல்வர் பழனிசாமியை, சாமானியர் முதல்வர் என அவரை புகழ்ந்து அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். 

வீட்டிலிருந்து கொண்டே தினமொரு அறிக்கை விடுபவர்களுக்கு மத்தியில் மக்களோடு மக்களாக தன்னை இணைத்துகொண்டு அன்பை வெளிப்படுத்தும் முதல்வர் பழனிசாமி, சாமானியர் முதல்வர் என கூறி மார்தட்டுகின்றனர் அதிமுகவினர். 
 

click me!