கீழடியை தொடர்ந்து காளையார் கோவில் .! 2000 ஆண்டு பழமையான கருப்பு சிவப்பு பானை கண்டெடுப்பு.!!

By T BalamurukanFirst Published Jun 25, 2020, 10:24 PM IST
Highlights

காளையார்கோயில் அருகே உள்ள நல்லேந்தல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்தநிலையிலும் முழுமையான அமைப்பிலும் காணப்படுகின்றன.

காளையார்கோயில் அருகே உள்ள நல்லேந்தல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்தநிலையிலும் முழுமையான அமைப்பிலும் காணப்படுகின்றன.காளையார்கோவில் பகுதிமட்டுமல்லாது அதன் தொடர்ச்சியான ஊர்களான மறவமங்களம் வேளாரேந்தல் போன்ற பகுதிகளிலும் முதுமக்கள் தாலி மற்றும் பழங்கால கற்கள் வட்ட எழுத்துக்கள் பூமியின் மேற்பரப்பில் காணப்படுவதாகவும் அங்கு தொல்லியல்துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் காளையார் கோவில் ஒன்றியச்செயலாளர் திருநாவுக்கரசு மாவட்ட ஆட்சியர் ஜெயக்காந்தனிடம் மனு அளித்திருந்தார்.விஜயமாணிக்கம் கிராமத்தில் இரும்பு தாதுக்கள் இன்னும் நிலப்பரப்பில் கிடக்கிறது. ஆக அந்த காலங்களில் ஆயுதம் தங்கம் ஆபரணம்  செய்யும் இடங்களாக இருந்திருக்கிறது.


கீழடியின் தொடர்ச்சியாக அங்கு எண்ண பொருள்கள் கிடைத்திருக்கிறதோ அதே பொருள்கள் இந்த பகுதிகளிலும் கிடைக்கிறது. ஆக வைகை நதியின் கிளை நதிகள் சிவகங்கை மாவட்டத்தில் ஓடியிருக்கிறது. இங்கேயும் வைகை நதி நாகரீகம் இருந்திருப்பது இதன் மூலம் உண்மையாகி இருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில் தற்போது 6-ம் கட்ட அகழாய்வுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய நான்கு இடங்களிலும் இந்த அகழாய்வுப் பணி திட்டமிட்டபடி நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு, கடுமையான மழைப் பொழிவு எனப் பல சிக்கல்களைக் கடந்து அகழாய்வுப் பணிகள் நடைபெறுகின்றன.6-ம் கட்ட அகழாய்வுப் பணியின் போது ஈமக்காடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்தில் முதுமக்கள் தாழிகள், மனித மண்டை ஓடு உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

இந்நிலையில், காளையார்கோயில் அருகே உள்ள நல்லேந்தல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்தநிலையிலும் முழுமையான அமைப்பிலும் தென்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் தீவிரமான மழைப் பொழிவால் 2,000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழிகளுக்குள் கறுப்பு - சிவப்பு பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.காளையார்கோயிலின் தெற்குப் பகுதியான நல்லேந்தல் என்ற இடத்தில் சுமார் 1,800 ஏக்கர் பரப்பளவில் முதுமக்கள் தாழிகள் மேல்பரப்பில் தென்பட்டுள்ளன. தற்போது முதுமக்கள் தாழிகளுக்குள் மனிதன் பயன்படுத்திய கருப்பு- சிவப்பு பாத்திரம் ஒன்று கிடைத்துள்ளது.  சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கோவானூர் கிராமத்தில் நதிக்கரை இருந்ததாகவும் அங்கே முத்து நவரத்தினகற்கள் போன்ற வணிக நரகமாக இருந்தது என்றும் சொல்லப்படுகிறது.

click me!