ஆளுநர் பதவி தேவையா? என கூறும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளுநர் வாசலிலேயே இருப்பார்கள். ஆளுங்கட்சியாக இருந்தால் ஆளுநர் பதவி வேண்டும் என மாற்றிப் பேசுவார்கள்.
தமிழக வெற்றி கழகம் துவக்கியுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள். அவர் தற்போது சோதனை காலகட்டத்தில் உள்ளார் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
திருச்சி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக முன்னாள் தேசிய தலைவர் ஹெச்.ராஜா: தமிழக காவல் துறையின் அத்துமீறல் நடவடிக்கைகள் பாரபட்ச செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. தமிழக காவல்துறை பாஜகவினரை குறிவைத்து வழக்கு பதிவு செய்கிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு 30 ஆண்டு பழமையான கோவிலை இடித்துள்ளார்கள். ஆளும் திமுக அரசு, இந்து மத விரோத அரசாக செயல்படுகிறது. எனவே தமிழக அரசு இந்து விரோத போக்கை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
undefined
இதையும் படிங்க: பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் மோடி தான்! கருத்துக்கணிப்பில் 64% மக்கள் விருப்பம்
துப்பாக்கி, வெடி பொருட்கள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடமிருந்து NIA கைப்பற்றி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என குற்றம்சாட்டினர். எதிர்காலத்தில் பாஜக தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். ஆளுநர் பதவி தேவையா? என கூறும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளுநர் வாசலிலேயே இருப்பார்கள். ஆளுங்கட்சியாக இருந்தால் ஆளுநர் பதவி வேண்டும் என மாற்றிப் பேசுவார்கள்.
இதையும் படிங்க: கைத்தட்டுதல்களுக்காக இப்படி மோசமா பேசுவீங்களா? சி.வி.சண்முகத்தை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பதற்கு சில சக்திகள் ஆயுத கடத்தலில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் பெரிய பயங்கரவாத அமைப்புகளை கட்டமைத்து வருகிறார்கள். தமிழக வெற்றி கழகம் துவக்கியுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள். அவர் தற்போது சோதனை காலகட்டத்தில் உள்ளார். தேர்தல் செயல்பாடுகளுக்குப் பிறகே அவரது நிலை புரியவரும் என தெரிவித்தார்.