
மெர்சல் படத்தில் போலீஸ், மருத்துவத்துறையை கேவலப்படுத்துவதாகவும் ஆர்வக்கோளாறில் தமிழக பாஜக தலைவர்கள் மெர்சலை எதிர்க்கின்றனர் எனவும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மெர்சல். இப்படம் தடைகள் பலவற்றைக் கடந்து தீபாவளியன்று வெளியாகியது.
தற்போது பல்வேறு வசூல் சாதனைகளையும் இப்படம் படைத்து வருகிறது. இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
பாஜகவின் இத்தகைய கருத்திற்கு அரசியல், திரையுலகினர் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் கே.பி.முனுசாமி, மெர்சல் படத்தில் போலீஸ், மருத்துவத்துறையை கேவலப்படுத்துவதாகவும் ஆர்வக்கோளாறில் தமிழக பாஜக தலைவர்கள் மெர்சலை எதிர்க்கின்றனர் எனவும் தெரிவித்தார்.