சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜக தயாராக உள்ளது... எல்.முருகன் அதிரடி சரவெடி பேச்சு..!

By vinoth kumarFirst Published Aug 24, 2020, 6:17 PM IST
Highlights

ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாக கூறும் திமுக இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து ஏன் சொல்வதில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாக கூறும் திமுக இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து ஏன் சொல்வதில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை தியாகராய நகரில் பாஜக செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் பேசுகையில்;- தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜக தயாராக உள்ளது. வருகின்ற காலம் பாஜகவின் காலம். பாஜகதான் அரசியலை நிர்ணயிக்க உள்ளது. கொரோனா சூழலை கையாண்டதில் உலகிற்கு எடுத்துக்காட்டாக பிரதமர் மோடி திகழ்கிறார். 

திமுக நவீன தீண்டாமையை கடைப்பிடித்து வருகிறது. வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். கொரோனா சூழலில் மக்கள் பணி செய்யும் மத்திய, மாநில அரசுகளை குறைகூறுவதிலேயே ஸ்டாலின் பொழப்பாக வைத்துள்ளார். கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் இழிவுபடுத்தியதை திமுகவும், காங்கிரசும் கண்டுகொள்ளவில்லை. இந்து வழிபாட்டின் மீது களங்கம் கற்பித்து திமுகவும், காங்கிரசும் ஒருசேரச செயல்பட்டு வருகிறது. ஓ.பி.சி இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் பொய் பரப்பி வருகிறது.

மேலும், தமிழகம் தற்போது ஆன்மீக பூமி. ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாக கூறும் திமுக இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து ஏன் சொல்வதில்லை என கேள்வி எழுப்பினார். புதிய கல்விக்கொள்கையால் மாணவர்களின் திறன் மேம்படும் என தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை மூலமாக 22 பிராந்திய மொழிகளை கற்கும் வாய்ப்பு உள்ளது என்றார். 

click me!