தமிழக தேர்தல் களத்தில் குதித்த பாஜக தலைமை... தேர்தல் பொறுப்பாளர் அதிரடியாக அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published Nov 13, 2020, 10:28 PM IST
Highlights

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாஜக தலைமை தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளது. தேர்தல் பொறுப்பாளராக சி.டி. ரவி நியமிக்கப்பட்டுள்ளார். 
 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு தயாராகிவருகிறது. அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி, தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் என பிஸியாக இருக்கிறது. இதேபோல பிற கட்சிகளும் தேர்தலுக்கான முன்னேடுப்புகளில் மூழ்கியுள்ளன.


மத்திய ஆளுங்கட்சியான பாஜக தமிழகத்தில் வாக்கு வங்கியை அதிகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிரபலங்களை கட்சியில் இணைப்பது, மாற்றுக் கட்சியினரை பாஜகவில் இணைப்பது என பிஸியாக உள்ளது. மேலும் வேல் யாத்திரை என்ற பெயரில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியையும் அக்கட்சி நடத்தி வருகிறது. மாநில பாஜக மட்டுமே தேர்தல் பணிகளில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது பாஜக தேசிய தலைமையும் தமிழக தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளது.


முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் பொறுப்பாளரை பாஜக தலைமை நியமித்துள்ளது. தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளராக இருக்கும் சி.டி.ரவி, தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல கேரள மாநில தேர்தல் பொறுப்பாளராக தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக தலைமை நியமித்துள்ளது. 

click me!