இன்று மாலை அதிமுக-பாமக இடையே தொகுதிகளை உறுதி செய்யும் பேச்சுவார்த்தை. இதுதான் பாமக கேட்கும் 23 தொகுதிகள்..

By Ezhilarasan BabuFirst Published Mar 5, 2021, 2:49 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமக உடன் தொகுதி பங்கீடு நிறைவுற்றது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதால் அதிமுக பாமக இடையேயான கூட்டணி சிக்கலின்றி முடிந்தது.  

அதிமுக கூட்டணியில் பாமக கோரும் 23 சட்டமன்ற தொகுதிகளின் உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இன்று அதிமுக -பாமக இடையே தொகுதியை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் இப்பட்டியல் வெளியாக உள்ளது.

அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமக உடன் தொகுதி பங்கீடு நிறைவுற்றது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதால் அதிமுக பாமக இடையேயான கூட்டணி சிக்கலின்றி முடிந்தது. அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன, இட ஒதுக்கீடு கோரிக்கை ஏற்க்கப்பட்டதால் கூட்டணியில் முதல்முறையாக குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட பாமக ஒப்புக்கொண்டதாகவும் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்திருந்தார். 

இந்நிலையில் தொகுதிகளை குறைவாகப் பெற்றுக் கொண்டதால் தாங்கள் விரும்பும் தொகுதிகளை தர வேண்டும் என்று அதிமுகவுடன் பாமக கூறியுள்ளதாக தகவல்கள்  வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று மாலை அதிமுக கூட்டணியில் பாமக கோரியுள்ள 23  தொகுதிகளை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில் பாமக அதிமுகவிடம் கோரியுள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாக உள்ளது.  

அதில் 1) திருப்போரூர் , 2) விக்கிரவாண்டி, 3) செங்கல்பட்டு , 4) சங்கராபுரம்,  5) கும்மிடிப்பூண்டி, 6) ஆரணி 7) பென்னாகரம் 8) காட்டுமன்னார்கோயில்  9) வீரபாண்டி 10) அணைக்கட்டு 11) ஓசூர் 12) நெய்வேலி 13) கலசபாக்கம் 14) பப்பிரெட்டிப்பட்டி 15)  சோளிங்கர் 16) குன்னம் 17) திண்டிவனம் 18) பண்ருட்டி 19) திருத்தணி  20) ஜெயங்கொண்டம் 21) மேட்டூர்  22) ஆற்காடு 23) வேளச்சேரி ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.  

 

click me!