அதிக தொகுதிகள் பெறுவதைவிட வெற்றிபெறும் தொகுதிகளுக்கு முயற்சி.. இறங்கி வந்த காங்கிரஸ்.?? ஏறி மிதித்த திமுக.

Published : Mar 05, 2021, 02:22 PM IST
அதிக தொகுதிகள் பெறுவதைவிட வெற்றிபெறும் தொகுதிகளுக்கு முயற்சி.. இறங்கி வந்த காங்கிரஸ்.?? ஏறி மிதித்த திமுக.

சுருக்கம்

கடந்த முறை பெற்றதைப் போல அதிக தொகுதிகளை பெறுவதைவிட, காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதிகளை பெறுவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக கூறினார். மேலும், 15 ஆண்டுகளாக திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாகவும் அதே கூட்டணியை தொடர உள்ளதாக தெரிவித்தார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக-திமுக என இரண்டு கட்சிகளுமே கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றன. அதிமுக- தேமுதிகவிடையே இழுபறி நீடிப்பதுபோலவே,  திமுகவில் அங்கம் வகித்துவரும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 41 இடங்களை கொடுத்தே ஆகவேண்டும் என காங்கிரஸ் திமுகவிடம் முரண்டு பிடித்து வருவதால் தொடர் இழுபறி நீடிக்கிறது. 

இதனால் காங்கிரஸ்- திமுக கூட்டணி என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அக்கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ விஜயதரணி கூறியதாவது;  காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி எந்த முடிவு எடுத்தாலும் அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் எனவும், தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறு வருகிறது அதில், நல்ல முடிவு வரும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தொகுதி பங்கீட்டிற்கான நடைமுறையை கே.எஸ். அழகிரி எடுத்து செல்வார். கடந்த முறை பெற்றதைப் போல அதிக தொகுதிகளை பெறுவதைவிட, காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதிகளை பெறுவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக கூறினார்.  மேலும், 15 ஆண்டுகளாக திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாகவும் அதே கூட்டணியை தொடர உள்ளதாக தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!