பாஜக கொடுத்த அழுத்தம்.. அப்செட்டான அதிமுக தலைமை.. அந்தர் பல்டி அடித்த மாஜி அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Jul 8, 2021, 2:50 PM IST
Highlights

பாஜக பற்றி நான் கூறிய கருத்து எனது சொந்த கருத்து இதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. ஜெயக்குமார் என்னிடம் கேட்டபோதும் எனது சொந்த கருத்து என்றே நான் சொன்னேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் பல கருத்துகளை பேசுவோம். 

பாஜக பற்றி நான் கூறிய கருத்து எனது சொந்த கருத்து இதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணத்தில் அதிமுக ஒன்றிய செயலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில்;-  பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை நாம் முழுமையாக இழந்துவிட்டோம். உதாரணமாக, விழுப்புரம் தொகுதியில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு சுமார் 20,000 வாக்குகள் உள்ளன. அதில், 18,000 வாக்குகள் விழுப்புரம் நகரத்தில் உள்ளன. விழுப்புரம் நகரத்தில் மட்டும் 16,000 வாக்குகள் குறைந்துள்ளன. முந்தைய அதிமுக ஆட்சி மீது மக்களுக்குக் கோபம் கிடையாது. 

அதிமுக ஆட்சி வரவேண்டும் என்று வாக்களிக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால், நமது கூட்டணி கணக்கு சரியில்லை. சிறுபான்மையினர் வாக்கு மற்றும் சில காரணங்களால் நாம் இந்தத் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தன் டுவிட்டர் பக்கத்தில்;- உங்களால் தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு என்று பதிவிட்டுள்ளார். இதனால் அதிமுக- பாஜக இடையே கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை உருவானதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சி.வி.சண்முகம் பேச்சு தொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில்;- கடந்த 4 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என பாஜக நினைக்கிறது. தனது தோல்விக்கு பாஜகவை சி.வி.சண்முகம் குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது. சி.வி.சண்முகத்தின் கருத்து கட்சி தலைமை கருத்தா என்பதை பார்க்க வேண்டும் என்றார். இதனையடுத்து, உடனே அலறி துடித்துக்கொண்டு;- ஓபிஎஸ் பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்". இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றார். 

இந்நிலையில், செஞ்சியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பாஜக பற்றி நான் கூறிய கருத்து எனது சொந்த கருத்து இதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. ஜெயக்குமார் என்னிடம் கேட்டபோதும் எனது சொந்த கருத்து என்றே நான் சொன்னேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் பல கருத்துகளை பேசுவோம். ஆனால், தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அது படியே செயல்படுவோம்.  பாஜக கூறியது அவர்களது கருத்து என்றார்.பாஜகவை விமர்சித்தி விட்டு ஒரே இரவில் இது எனது தனிப்பட்ட கருத்து என சி.வி.சண்முகம் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

click me!