"மக்களால் நான்... மக்களுக்காகவே நான்.." - இது நல்லாருக்கே..!! தடா ரஹீமின் புதிய கோரிக்கை

First Published Dec 8, 2016, 3:45 PM IST
Highlights


முதல்வர் எம்ஜிஆர் மறைந்த போது அவரது சொத்துக்களைபொதுமக்கள் பயன்பாட்டுக்காக உயிலெழுதி வைத்து நினைவகம் அமைத்தது போல் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களும் பொதுமக்களுக்கு பயன் படுத்தும் வகையில் நினைவகமாக கல்விக்கூடங்களாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 

இதே கோரிக்கையை இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை: 

மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற முதல்வரின் தாரகமதிரத்தை மெய்பிக்கும் வகையில் அவரது சொத்துக்களை நாட்டுடமையாக்கி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நினைவிடம் ஆக்க வேண்டும் என்று மக்களால் நான் ! 

மக்களுக்காக நான் !!

என்ற தாரக மந்திரத்தோடு வாழ்ந்து சென்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.

அவர் மறைந்த பின் தமிழகம் முழுவதும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

முன்னாள் மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு 118.58 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தேர்தல் கமிஷனில் தெரிவித்துள்ளார். 

இந்த சொத்துகளில் போயஸ் கார்டன் வீடும் , சிறுத்தாவூர் பங்களாவும் அடங்கும்.

மக்களால் நான்

மக்களுக்காக நான் என தனக்கு பின் தனது அத்துனை சொத்துகளும் மக்களுக்கு தான் உரிமை என்பது முன்னாள் முதல்வரின் எண்ணமாக இருந்தது ஆகையால் அவரின் போயஸ் கார்டன் , சிறுத்தாவூர் பங்களா ஆகியவற்றை அரசுடமையாக்கி  மக்கள் பார்வைக்காக"அம்மா நினைவகம்

அமைக்க வேண்டும். 

 முதல்வரின் தோழி சசிகலா நடராஜன் இதை செய்ய  முன் வர வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் அன்பான கோரிக்கை

 இதே கோரிக்கையை முதல்வருக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்கள் பலரும் கோரிக்கையாக விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது .

அன்புடன் 

தடா ஜெ.அப்துல் ரஹிம் 

இந்திய தேசிய லீக் கட்சி

மாநில தலைவர்  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

click me!