30 சதவீத பெண்கள்தான் பெண்மையுடன் இருக்கிறார்கள்... ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சால் ஆடிப்போன பெண்கள்..!

By vinoth kumarFirst Published Aug 25, 2019, 1:25 PM IST
Highlights

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண்ணும், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆணும் இருப்பதாகக் கூறினார். மேலும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆண்களை விட பெண்களே அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார். ஆங்கிலமும், நகர்ப்புற வாழ்க்கை முறையும் நாட்டின் கலாச்சாரத்தைக் குலைத்து வருகிறது. 

நாட்டில் 30 சதவீதம் பெண்களாவது பெண்மையுடன் இருப்பதாக நம்புகிறேன் என ஆடிட்டர் குருமூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

சென்னை மயிலாப்பூரில் தனியார் மருத்துவமனையில் 10-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு என்ன என்பது தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. அதில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய அவர் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண்ணும், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆணும் இருப்பதாகக் கூறினார். மேலும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆண்களை விட பெண்களே அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார். ஆங்கிலமும், நகர்ப்புற வாழ்க்கை முறையும் நாட்டின் கலாச்சாரத்தைக் குலைத்து வருகிறது. 

பெண்ணிற்கும், பெண்மைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பெண்மை இல்லாத பெண்களும் இருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். பெண்மை உள்ள பெண்கள் தான் தெய்வம். அவர்கள் தெய்வம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயத்தில் எல்லா பெண்களையும் தெய்வம் என்று சொல்லிட முடியாது. முக்கியமானது என்னவென்றால் பெண்மையை நாம் இழந்து வருகிறோம். இது தான் ஆபத்தானது என கூறியுள்ளார். 

பெண்ணை உருவாக்க முடியாது. ஆனால் பெண்மையை உருவாக்க முடியும். பெண்மையை பெண்ணில் மட்டுமே உருவாக்க முடியும். அதிகபட்சம் 30 சதவிகித பெண்களாவது பெண்மையுடன் இருப்பதாகக் கருதுவதாகவும் கூறினார். அவ்வாறு பெண்மையுடைய பெண்களை மட்டும் தான் தெய்வமாக ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். அவருடைய பேச்சு மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரையும் ஆண்மையற்றவர் என்று கூறியது பெரும் சர்சசையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!