கடன் வாங்கி வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு... பின்னர் புலம்புவது ஏன்? எஸ்.வி.சேகர் கேள்வி!

 
Published : Nov 23, 2017, 12:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
கடன் வாங்கி வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு... பின்னர் புலம்புவது ஏன்? எஸ்.வி.சேகர் கேள்வி!

சுருக்கம்

S.Ve. Sekar Condemned

வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு கடன் வாங்கிய பின்னர் புலம்புவது ஏன் என்று எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார். இணை தயாரிப்பாளர் அசோக்குமார், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், திரைத்துறையையே குற்றம்சாட்டுவதுபோல் எஸ்.வி.சேகர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் அத்தை மகனான அசோக்குமார். இவர் சசிகுமாரின் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் அசோக்குமார் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அசோக்குமார் எழுதியுள்ள கடிதத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. அவர் ஆட்களை வைத்து, மிரட்டுவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அன்புச்செழியனின் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் அசோக்குமார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பைனான்சியர் அன்புசெழியன், தலைமறைவாகி உள்ளார்.

அசோக்குமாரின் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மீது சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அசோக்குமார் தற்கொலை குறித்து, திரையுலகைச் சேர்ந்த பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல் ஹாசன், அசோக்குமார் தற்கொலை குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரைத்துறையினர் ஒன்று சேர்ந்து கந்து வட்டியால் தயாரிப்பாளர்களின் பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் கந்து வட்டி கும்பலை ஒழித்து கட்டுவோம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகர் விஷால் ஆவேசமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், இது தொடர்பாக டுவிட்டரில் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில், இனி கடன் வாங்கி படமெடுக்க மாட்டோம். வாங்கினால் சொன்னபடி திருப்பிக் கொடுத்து விடுவோம். வாங்கும்போது நீட்டும் எல்லா வெள்ளை பேப்பரிலும் கையெழுத்து போடமாட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொரு பதிவில், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ஏழைத்த தொழிலாளி கடன் வாங்கிறதுக்கும் ஆடம்பர சுகபோக வாழ்க்கைக்கு கடன் வாங்கிறவருக்கும் வித்யாச இருக்கும். கடனில்லாமல் வாழ்பவரே மிகுந்த சந்தோஷமானவர்.

மற்றொரு டுவிட்டர் பதிவில், இரண்டு வகை வாழ்க்கை முறை. 1. தன் வருமானத்துதிற்குள் வாழ்வது. 2 தன் வாழ்க்கை முறைக்கு ஏற்ப நேர்மையாக மிக அதிகமாக உழைத்து சம்பாதித்து வாழ்வது என்றும் மற்றொரு பதிவில் 18 வயதுக்கு மேல் ஆன யாரும் வெள்ளைப் பேப்பரில் கையெழுத்துப்போட்டுவிட்டு புலம்புவதோ அடுத்தவரை குறை சொல்வதோ ஏற்புடையது அல்ல. சட்டம் துணை நிற்காது என்றும் எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ளார்.

எஸ்.வி.சேகரின் இந்த பதிவு திரைத்துறையினர் மீது குற்றம் சுமத்துவதுபோல தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!