கமலின் சர்ச்சை குறித்து எஸ்.வி. சேகர் சர்ச்சை பேச்சு..! சூட்டோடு சூடா இதுவும் கடந்து போகுமோ..?

By ezhil mozhiFirst Published May 19, 2019, 5:34 PM IST
Highlights

தொடர்ந்து கமல் சர்ச்சையாக பேசி வந்தால் அடுத்த தேர்தலில் கட்சியே இல்லாமல் போகும் சூழல் உருவாகும் என எஸ்வி சேகர் திருச்சியில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.
 

கமலின்சர்ச்சை குறித்து எஸ்.வி. சேகர் சர்ச்சை பேச்சு..! சூட்டோடு சூடா இதுவும் கடந்து போகுமோ..?

தொடர்ந்து கமல் சர்ச்சையாக பேசி வந்தால் அடுத்த தேர்தலில் கட்சியே இல்லாமல் போகும் சூழல் உருவாகும் என எஸ்வி சேகர் திருச்சியில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது, "பொருளாதார அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என எம்ஜிஆர் ஆசைப்பட்டார். அதனை நிறைவேற்றி உள்ளார் பிரதமர் மோடி பிரதமர் மோடியின் சாதனைகள் ஆட்டம் காண வைத்துள்ளது.. எப்படி போலீசை திருடனுக்கு பிடிக்காதோ... அது மாதிரிதான் எதிர்க்கட்சிகளுக்கும் மோடியை கண்டால் பிடிக்கவில்லை.

தமிழகத்தில் பாஜக பற்றியும் மோடியைப் பற்றியும் பேசப்படும் எதிர்க் கருத்துகள் அனைத்தும் கற்பனையே.. தேர்தலில் 300 இடங்களுக்கும் மேல் பெற்று மோடி கட்டாய வெற்றி பெறுவார். பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அங்கீகரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இந்த நேரத்தில் நன்றி கலந்த பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோட்சே பற்றி கமல் பேசி வருவது தேவையே இல்லாத ஒன்று. முன்பு ஒருமுறை நான் சொல்லியிருந்தேன்.. 6 சதவீத வாக்குகளை பெற்று கமல் நல்ல ஒரு இடத்திற்கு வருவார் என்று... ஆனால் அவர் இவ்வாறு தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களைப் பேசி வந்தால், அடுத்த தேர்தல் வருவதற்கு ஒரு கட்சியை இல்லாமல் போகும் நிலை உருவாகும் என சர்ச்சைக்கு பேர்போன எஸ்வி சேகர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!