பணக்கட்டை அவிழ்க்க தயங்கும் சுதீஷ்! அதிர்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள்!

By Selva KathirFirst Published Mar 23, 2019, 12:18 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்காக எதிர்பார்த்த அளவிற்கு சுதீஷ் செலவு செய்யாத காரணத்தினால் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்காக எதிர்பார்த்த அளவிற்கு சுதீஷ் செலவு செய்யாத காரணத்தினால் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் துணைச் செயலாளர் சுதீஷ் களமிறங்கியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட தன்னுடைய பிரச்சாரத்தை சுதீப் ஆதரித்துதான் துவங்கினார். சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட கருமந்துறை பகுதியில் சதீசை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை துவக்கினார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையுமே அதிமுக தரப்பு தான் செய்துள்ளது. அதிமுக மட்டுமல்லாமல் பாமக தேமுதிக பாஜக போன்ற கட்சிகளின் தொண்டர்களை அழைத்து வரும் பொறுப்பை யும் கூட முதலமைச்சர் சார்பில்தான் செய்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் என்பதால் எவ்வித பின்னடைவு ஏற்பட்டு விடக்கூடாது என்கிற கவனத்தில் அதிமுக இந்த செலவை ஏற்றுக் ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே வந்த சுதீஷ் தற்போது வரை கூட்டணி கட்சி நிர்வாகிகளை கவனிக்கவில்லை என்று புலம்பல் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. கையில் இருக்கும் படத்தை வெளியே எடுக்காமல் தேர்தல் வேலை எப்படி நடக்கும் என்று அதிமுகவினர் வெளிப்படையாகவே தேமுதிக நிர்வாகிகள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

அதற்கு கடந்த தேர்தலில் சுமார் 12 கோடி ரூபாய் வரை செலவழித்தும் இரண்டாம் இடம் கூட சுதீஷால் சேலத்தில் பெற முடியவில்லை. எனவே இந்த முறை தேர்தல் செலவில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தன் உடன் இருப்பவர்களை சுதீஷ் கேட்டுக் கொண்டதாகச் சொல்கிறார்கள். இதனால்தான் சுதீஷ் தரப்பில் இருந்து தற்போது வரை பணப்பட்டுவாடா நடைபெறாமல் இருப்பதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. 

அதுமட்டுமல்லாமல் சுதீஷ் தேர்தல் செலவை அதிமுகவே கவனித்துக் கொள்ளும் என்று கூறி தான் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதாக ஒரு பேச்சு நிலவுகிறது.

எனவே அதிமுக தரப்பில் இருந்து பணம் வந்த பிறகுதான் சுதீஷ் அந்த பணத்தை கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு பகிர்ந்து கொடுப்பார் என்றும் தேமுதிக தரப்பில் இருந்து தகவல்கள் கசிய விடப்படுகின்றன. ஆனால் அதிமுக தரப்பு தேர்தல் செலவுக்கு தாங்கள் பணம் கொடுப்பதாக கூறவில்லை என்றும் வாக்காளர்களின் செலவுக்கு மட்டுமே தாங்கள் பணம் கொடுப்பதாக கூறியுள்ளதாகவும் தேமுதிக தரப்பில் பதில் அளித்து வருகின்றனர். இந்தக் குழப்பத்தால் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக தேமுதிகவினர் கவலை தெரிவித்துவருகின்றனர்.

சுதீஷ் கம்பியாக வேண்டும் என்று நினைத்தால் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் தாராளமாக இருந்தால் மட்டுமே பொன்முடியின் மகனை வீழ்த்துவது சாத்தியம் என்று அதிமுகவினரே தேமுதிகவினருக்கு அறிவுரைகள் கூறி வருகின்றனர்.

click me!