ஆந்திராவுக்கு புதிய ஆளுநர்... யாருன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

By Asianet TamilFirst Published Jun 10, 2019, 9:49 PM IST
Highlights

நாடளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை கடந்த சில மாதங்களுக்கு முன்பே சுஷ்மா அறிவித்தார். அதன்படி நடந்து முடிந்த தேர்தலில் சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிடவில்லை. அவர் வகித்து வந்த வெளியுறவுத் துறை சிவசங்கருக்கு வழங்கப்பட்டது. 
 

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


 நரேந்திர மோடி முதல் முறை பிரதமராகப் பதவியேற்றபோது அவருடைய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்றார். வெளியுறவுத் துறை அமைச்சராக சிறப்பாகப் பணியாற்றினார் என்ற பெயரை எடுத்தார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட சுஷ்மாவுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பிறகும் வெளியுறவுத் துறையைத் திறம்பட கவனித்துவந்தார்.
ஆனால், தன்னுடைய உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளும் வகையில் நாடளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை கடந்த சில மாதங்களுக்கு முன்பே சுஷ்மா அறிவித்தார். அதன்படி நடந்து முடிந்த தேர்தலில் சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிடவில்லை. அவர் வகித்து வந்த வெளியுறவுத் துறை சிவசங்கருக்கு வழங்கப்பட்டது. 


இந்நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திரா மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக நரசிம்மன் இருந்துவருகிறார். அவருக்குப் பதிலாக  சுஷ்மா ஸ்வராஜை ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திராவில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், நிர்வாக வசதிக்காக புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டிருப்பாதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

click me!