எப்பா.. ராஜேந்திர பாலாஜி விஷயத்தில் கோபப்பட்ட உச்ச நீதிமன்றம்.. ஆடிப்போன தமிழக அரசு.

By Ezhilarasan BabuFirst Published Jan 6, 2022, 12:57 PM IST
Highlights

ராஜேந்திர பாலாஜி மீது அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, உள்நோக்கத்துடன் வழக்கு பதிய வில்லை என தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

ராஜேந்திர பாலாஜி மீது அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, உள்நோக்கத்துடன் வழக்கு பதிய வில்லை என தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

ராஜேந்திர பாலாஜியின் வழக்கை இன்று விசாரிக்க இருந்தோம் அதற்குள் என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பியா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அவரது ஆதரவாளர்களை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது கே. டி ராஜேந்திர பாலாஜி 3 கோடியே 10 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக அவர்மீது ஏராளமான புகார்கள் குவிந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யக் கூடும்  என்பதால் ராஜேந்திர பாலாஜி தப்பி தலைமறைவானார். 

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில் நேற்று காலை கர்நாடக மாநிலம் ஹசனில் அவர் கைது செய்யப்பட்டார். காரில் சென்று கொண்டிருந்த போது தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவருடன் இருந்த மேலும் 4 பேர் கைதாயினர். இந்நிலையில் ட்ரான்ஸ்சிட்  வாரண்ட் பெற்று நள்ளிரவு தமிழகம் அழைத்துவரப்பட்டார் ராஜேந்திர பாலாஜி. பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு பிறகு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக தலைமறைவான கையோடு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் ராஜேந்திர பாலாஜி.

அதற்கான  வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, அவரின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர இருந்தது அதற்குள் என்ன அவசரம்?  ஏன் அதற்குள் ராஜேந்திர பாலாஜியில் ஆதரவாளர்களை தொந்தரவு செய்தீர்கள்.? இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கா.? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதை உடனே மறுத்த தமிழக அரசு ராஜேந்திர பாலாஜி மீது எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை, அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கும் பதிவு செய்யவில்லை என பதில் அளித்தது. அதை அடுத்து அவர் மனுவின் மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார். மேலும் ராஜேந்திர பாலாஜியின் முன்னாள் உதவியாளர்கள் பாபுராஜ், பலராம், வழக்கறிஞர் முத்துப்பாண்டியன் ஆகியோரை கைது செய்ய இடைக்கால தடை விதித்ததுடன்.
 

click me!