டிடிவிக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு மேலும் அதிகரிக்கும்: செந்தில் பாலாஜி எம்எல்ஏ

First Published Aug 27, 2017, 3:57 PM IST
Highlights
Support for MLAs for TTV will increase


டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று டிடிவி ஆதரவு எம்எல்ஏ செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்கு டிடிவி தினகரன் தரப்பினர் கடும் அதிருப்திக்கு உள்ளானார்கள். ஊழல் ஆட்சி என்று கூறிய ஓ. பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் பதவி அளித்துள்ளதாக டிடிவி தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் எடப்பாடிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

எடப்பாடி தரப்பினர், தங்கள் தரப்பு எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவர் என்றும், பாதுகாப்புக்காக புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

புதுச்சேரி, சின்ன வீராம்பட்டனத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள், புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் அவர்கள், வீராம்பட்டணத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு இன்று மீண்டும் திரும்பியுள்ளனர். அப்போது, எம்எல்ஏ செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறினார். பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகளின் இணைப்பு மக்களுக்காக அல்ல என்றும் அது பதவிக்காகவே நடந்த இணைப்பு என்று செந்தில் பாலாஜி எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

click me!