மத்திய அமைச்சர் திடீர் ராஜினாமா.? விவசாயின் மகளாக,சகோதரிகளாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.!

Published : Sep 17, 2020, 10:58 PM IST
மத்திய அமைச்சர் திடீர் ராஜினாமா.? விவசாயின் மகளாக,சகோதரிகளாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.!

சுருக்கம்

மத்திய அரசின் விவசாயிகள் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020-க்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோன்மணி அகாலிதளம் சார்பில் மத்திய அமைச்சராக உள்ள ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா  செய்திருக்கிறார்.

ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா ஏன்? 

விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பாஜக கூட்டணியில் உள்ள சிரோண்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று பேசிய சிரோண்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டார். மேலும், மத்திய மந்திரியாக உள்ள ஹர்ஷிமத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார் என தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து,மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரான "ஹர்சிமத் கவுர் பாதல்" தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 'விவசாயிகளுடன் அவர்களது மகளாகவும், சகோதரியாகவும் நிற்பதில் பெருமை அடைவதாக' அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணையப்போகிறேனா..? ஷாக் அப்டேட் கொடுத்த வைத்திலிங்கம்- அதிமுக டாக்டர் சரவணன்..!
ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது..! தம்பிதுரை மீண்டும் திட்டவட்டம்..!