நடுவானில் பறந்த விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு.. பதறிய விமானி.. அலறிய 123 உயிர்கள்.. பின்னர் நடந்தது என்ன?

By Ezhilarasan BabuFirst Published Sep 24, 2021, 12:59 PM IST
Highlights

விமானத்திலிருந்து பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், தற்போது விமானிகள் அனைவரும் ஓய்வு கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விமானப் பொறியாளர்கள் விமானத்தின் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து அந்தமான் புறப்பட்ட  விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த 123 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான முனையங்கள் மூலம் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 117 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட 123 பேருடன் புறப்பட்டது. 

அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது, அதை விமானி கண்டுபிடித்தார், இதனால் பதற்றமடைந்த அவர் விமானத்தை தொடர்ந்து இயக்கினால் ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்து உடனே சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விமானத்தை அவரச அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார். நடுவானில் பறந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து சென்னை விமான  நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து துரிதமாக விமானத்தை அவர் தரையிறக்கி சமயோஜிதமாக நடந்துகொண்டதன் காரணமாக 123 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளனர். 

விமானத்திலிருந்து பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், தற்போது விமானிகள் அனைவரும் ஓய்வு கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விமானப் பொறியாளர்கள் விமானத்தின் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் மாற்று விமானத்தில் பயணிகளை அந்தமானுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும்  விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

click me!