அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் மூச்சு திணறல் அதிகரிப்பு.. ஐசியூவில் தீவிர சிகிச்சை.. எக்மோ கருவி பொருத்தம்.!

By vinoth kumarFirst Published Oct 25, 2020, 12:06 PM IST
Highlights

தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து எக்மோ கருவி மூலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து எக்மோ கருவி மூலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 13ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானதையடுத்து, நேரில் சென்று ஆறுதல் சொல்ல தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  உடனே அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர், நெஞ்சு வலியில் இருந்து விடுபட்ட அமைச்சர் துரைக்கண்ணு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி, முதல்வர் பழனிசாமி, மருத்துவமனை சென்று அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்து வந்தார். இதனையடுத்து, இன்று அதிகாலை வருக்கு  தீவிராக மூச்சுத்திணறலால் அவதிப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

click me!