கொரோனா பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் திடீர் மரணம்!!

By Thiraviaraj RMFirst Published Apr 3, 2020, 9:59 AM IST
Highlights

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தலைமை காவலர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். 

T.Balamurukan

கொரோனா வைரஸ் தொற்று பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் பிடித்துள்ளது. மகாராஷ்ட்ரா மநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது.இந்தியாவில் இந்த தொற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் ஊரடங்கு மார்ச் 24ம் தேதி அறிவித்தார் பிரதமர் மோடி.இந்த ஊரடங்கு ஏபரல்14ம் தேதி வரைக்கும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று மட்டும் 75 பேருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டது.இதில் 74 பேர் டெல்லி இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் காவல்துறை பணியாற்றி வருகிறது. இரவு பகலாக இவர்களின் பணி மகத்தானதாக உள்ளது. பேரிடர் காலம் என்பதால் போலீசார் விடுமுறை இல்லாமல் வேலை செய்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தலைமை காவலர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். களம்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் குப்பன், இரவுப்பணியின் போது உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு காவல்துறையில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!