அப்ப ஒரு தீர்ப்பு: இப்ப ஒரு தீர்ப்பு.., உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய திருமா வலியுறுத்தல்

Published : Feb 10, 2020, 07:59 PM IST
அப்ப ஒரு தீர்ப்பு: இப்ப ஒரு தீர்ப்பு.., உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய திருமா வலியுறுத்தல்

சுருக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்ப 16 சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த ஒரு தடையும் இல்லை என்று தெளிவாக கூறியுள்ளது. இதற்கு மாறாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஆபத்தானதாகும். 

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்..! மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறி;க்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


உத்தரகாண்ட் மாநிலத்தில் இடஒதுக்கிடு வழங்கப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல. ஒரு மாநில அரசு விரும்பினால் இட ஒதுக்கீடு வழங்கலாம் இல்லை என்றால் அவர்களை வற்புறுத்த முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. இது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்ப 16 சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த ஒரு தடையும் இல்லை என்று தெளிவாக கூறியுள்ளது. இதற்கு மாறாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஆபத்தானதாகும். இதுவரை கட்டிக் காப்பாற்றப்பட்ட சமூக நீதி கொள்கையைக் குழிதோண்டிப் புதைப்பதாகும். இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது.


 உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஏற்கனவே இட ஒதுக்கீடு பிரச்சனையில்2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 5நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புக்கும்.2019 ஆம் ஆண்டில் பீகே பவித்ரா வழக்கில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புக்கும் முரணாக இருக்கிறது
இதுதொடர்பாக இன்று மக்களவையில் உறுப்பினர்கள் பிரச்சனை எழுப்பிய போது மத்திய அரசின் சார்பில் பதிலளித்த பாராளுமன்ற அலுவல்களுக்கான அமைச்சர் இதுகுறித்து அராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்று பட்டும் படாமலும் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த எதிர்வனை நீதிமன்றத்தைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டை பறிப்பதற்கு பாஜக முயற்சிக்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடஒதுக்கீட வழங்குவதற்கான சிறப்பு சட்டம் ஒன்றை உடனடியாக மத்திய அரசு இயற்ற வேண்டும். அந்த சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம்.

TBalamurukan

PREV
click me!

Recommended Stories

மோடிக்காக காரை ஓட்டிய முஹமது நபியின் 42 வது நேரடி தலைமுறை ஜோர்டான் இளவரசர்..!
EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு