
கர்நாடக மாநிலம் மைசூரில் இளம்பெண் ஒருவர் மூன்று திருமணங்கள் செய்து கணவன்களை ஏமாற்றிய நிலையில் நான்காவதாக ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். மூன்றாவது கணவன் அந்தப் பெண் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பம் வளர வளர அதற்கிணையாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் சமூக சீரழிவுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றே சொல்ல்லாம். அந்த வகையில் பல டேட்டிங் ஆப்களில் சாட்டிங் செய்து ஊர் சுற்றும் பெண் மூன்று ஆண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றிய நிலையில் நான்காவது ஒருவரை காதலித்து ஊர் சுற்றிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
மைசூரில் உள்ள உதயகிரியைச் சேர்ந்தவர் நிதா கான், எப்போதும் முகத்தில் கூலிங்கிளாஸ், உதட்டுக்கு லிப்ஸ்டிக், ஆளை மயக்கும் சிரிப்பு என வலம் வந்துள்ளார் இவர். பல டேட்டிங் ஆப் களை பயன்படுத்தி வரும் இவர் நன்கு சம்பாதிக்கும் இளைஞர்களை மடக்கி ஜல்சா செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். முன்னதாக 2019ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது, முதல் கணவரை பிரிந்த இவர் இரண்டாவதாகவும் ஒரு இளைரை திருமணம் செய்து பின் விலகியுள்ளால். இந்நிலையில் டேட்டிங் ஆப் மூலம் அவருக்கு மூன்றாவதாக ஆசம் கான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் HRஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் டிண்டர் ஆப் மூலம் அறிமுகமான நிதாகானை திருமணம் செய்து கொள்ள விரும்பினார் அவர்.
முன்னதாக நிதா கானுக்கு 2019 திருமணம் நடந்தது அவருக்கு தெரியாது, ஆளை யமக்கும் நிதா கானின் சிரிப்பில் மயங்கிப்போன ஆசம் கான் நிதா கானை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆர்வம் காட்டினார். ஆனால் நிதா கானுக்கு காதலோடு சரி, கல்யாணம் குடும்ப வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை. ஆண்களுடன் ஆன்லைனில் அரட்டை அடிப்பது , விரும்பும் நேரத்தில் சந்திப்பது, ஊர் சுற்றுவது என பிடித்தவர்களுடன் பிடித்த மாதிரி சுதந்திர பறவையாக சுற்று வந்துள்ளார். ஒருகட்டத்தில் ஆசம் கானின் ஆர்வத்தை பார்த்து அவரையும் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார் நிதா கான்.
ஒரு சில வாரங்கள் அமைதியாக இருந்த நிதாகான் மீண்டும்தன் பழைய வேலையை ஆரம்பித்தார். அவளது நடத்தையில் மூன்றாவது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவளது நடவடிக்கைகளை கண்காணித்தார் 3வது கணவர், இந்நிலையில் தான் கடந்த வாரம் ஒரு இளைஞருடன் சுற்றும் போது கையும் களவுமாக பிடிபட்டார் நிதா கான். அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்த கணவர் ஆசம் கான் அவர்களை உதயகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்ததுடன் அவர் மீது மோசடி புகார் கொடுத்தார். பின்னர் போலீசார் விசாரித்தில் ஏற்கனவே இரண்டு திருமணங்களை செய்து கொண்ட நிலையில் மூன்றாவதாகதான் ஆசம் கானை திருமணம் செய்து கொண்டதாக அந்த பெண் கூறினார். இதைக் கேட்டு ஆசம் கான் ஆடிப்போனார்.
இதற்கு முன் திருமணம் செய்துகொண்டவர்களையும் அவர் முறையாக விவாகரத்து செய்யவில்லை என தகவல் வெளியானது. ஒன்றல்ல இரண்டல்ல, ஒன்றுக்கு தெரியாமல் மற்றொன்று என இதுவரை மூன்று திருமணங்களை செய்துள்ள நிதா கானின் நாடக காதல் கதையை கேட்டு போலீசார் அதிர்ந்தனர். டிண்டல் ஆப் மூலம் ஆண்களுடன் பழகுவது காதல் என்ற பெயரில் நெருங்கி பழகுவது திருமணம் செய்து கொள்வது பிறகு பிரிந்து செல்வது இதுதான் நிதா கானின் டாஸ்க்காகவே இருந்து வந்துள்ளது என அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது. இந்நிலையில்தான் நான்காவதாக ஒரு இளைஞருடன் காதல் என்ற பெயரில் சுற்றிவந்த நிலையில் வசமாக பிடிபட்டுள்ளார் அவர். 3வது கணவரின் புகாரின் பேரில் போலீசார் நிதா கான்மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.