சு.சாமிக்கு அடிக்கப்போகுது அதிர்ஷ்டம்..! "இவரை" பற்றி "அவர்" எடுத்த அந்த முடிவு..!

Published : Dec 25, 2018, 03:05 PM IST
சு.சாமிக்கு அடிக்கப்போகுது அதிர்ஷ்டம்..! "இவரை" பற்றி "அவர்" எடுத்த அந்த முடிவு..!

சுருக்கம்

வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால் சுப்ரமணிய சாமிக்கு மிக முக்கிய பதவி வழங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால் சுப்ரமணிய சாமிக்கு மிக முக்கிய பதவி வழங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

சுப்ரமணிய சாமி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிறகு ராஜ்யசபாவில் நியமன எம்பியாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பை காரணம் காட்டி எந்த அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்படவில்லை. ஆனால் சுப்பிரமணிய சாமியோ தனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார் இந்த நிலையில்கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசை குறை கூறி வந்தார் சுந்தரமணிய சாமி. 

இதனை எல்லாம்  கவனித்து வந்தது பாஜக. பின்னர் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவரும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரும் சுப்ரமணிய சாமியிடம் மத்திய அரசை குறை கூறுவதை நிறுத்திவிடுங்கள். காங்கிரசுக்கு அதிக நெருக்கடி கொடுக்கும் வகையில் வேறு என்ன செய்ய முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள். பாஜக வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நீங்கள் கண்டிப்பாக ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பீர்கள் என ஆதரவு குரல் கொடுத்து உள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியை பொறுத்தவரையில் சீனாவுடனான உறவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறார். மேலும் சீன சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் சீன பொருளாதாரம் எப்படி என்பதை நன்கு அறிந்தவர் சுப்பிரமணியசுவாமி. 1962 போருக்கு பின்னர் சீனா சென்ற முதல் இந்திய தலைவர் என்றால் அது சுப்ரமணியசுவாமி தான். 

மேலும் சுப்ரமணிய சாமி சீனா மற்றும் சீனப் பொருளாதாரத்தை பற்றியும் உலக அளவில் பொருளாதாரத்தைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் சீனா அல்லது அமெரிக்க தூதராக சுப்ரமணியசுவாமியை நியமிக்க மிக அதிக வாய்ப்பு உள்ளது என பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!