ப. சிதம்பரத்தை வேறுமாதிரி விசாரிக்க சு.சாமி பலே...ஆலோசனை...!

Published : Aug 27, 2019, 04:13 PM ISTUpdated : Aug 27, 2019, 04:14 PM IST
ப. சிதம்பரத்தை வேறுமாதிரி விசாரிக்க  சு.சாமி பலே...ஆலோசனை...!

சுருக்கம்

ப.சிதம்பரம் ஒத்துழைக்காத பட்டசத்தில் அவரை நார்கோ டெஸ்டிற்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார், அதாவது சோடியம் பென்டோதல் அல்லது சோடியம் அமிடல் என்ற மருந்தை ஊசி மூலம் ஒருவர் உடலில் செலுத்தி  அந்த நபரை அரை மயக்க நிலைக்கு கொண்டுவந்து. அவரிடத்தில் விசாரணை நடத்தும் பட்சத்தில் அவரால் எந்த ஒரு பொய்யும் சொல்லமுடியாது, அவருக்கு தெரிந்த எல்லா உண்மைகளையும் அப்போது அவர் வெளியே சொல்லி விடுவார். இதுவே நார்கோ டெஸ்ட் ஆகும்.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பம் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனில் அவரை நார்கே டெஸ்டிற்கு உட்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள ப. சிதம்பரத்தை  ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது, அதிகாரிகளின் விசரணையின் கீழ் இருந்துவரும் ப.சிதம்பரம் அவர்களின் கேள்விக்கு முறையாக பதில் சொல்லாமல்,  எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு ஆமாம் , இல்லை, தெரியாது,  என்ற வகையிலேயே அவர் பதில் சொல்லி வருவதாக கூறப்படுகிறது.  ப.சிதம்பரம் முறையாக பதில் சொல்லாததால், சிபிஐ அதிகாரிகள் விசாரனையை தொடரமுடியாமல் திணறி வருகின்றனர்.  ப.சிதம்பரம் முறையாக விசாரனைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்திலும் புகார் தெரிவித்துள்ள நிலையில் , மேலும் ஐந்து நாட்களுக்கு  விசாரனையை நீட்டித்து நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  

ஆனாலும் ப.சிதம்பரத்தின் நடவடிக்கையில் எந்த மாற்றமும்  இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்த தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, விசாரணைக்கு  ப.சிதம்பரம் ஒத்துழைக்காத பட்டசத்தில் அவரை நார்கோ டெஸ்டிற்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார், அதாவது சோடியம் பென்டோதல் அல்லது சோடியம் அமிடல் என்ற மருந்தை ஊசி மூலம் ஒருவர் உடலில் செலுத்தி  அந்த நபரை அரை மயக்க நிலைக்கு கொண்டுவந்து. அவரிடத்தில் விசாரணை நடத்தும் பட்சத்தில் அவரால் எந்த ஒரு பொய்யும் சொல்லமுடியாது,

அவருக்கு தெரிந்த எல்லா உண்மைகளையும் அப்போது அவர் வெளியே சொல்லி விடுவார். இதுவே நார்கோ டெஸ்ட் ஆகும். ஆக விசாரணை அதிகாரிகளுக்கு தேவையான விவரங்கள் இந்த்த டெஸ்டின் மூலம்  கிடைத்து விடும் என்பதுதான் சு. சுப்பிரமணிய சுவாமியின் ஆலோசனை.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!